ஹரிஷ் கல்யாணின் 'ஓ மணப் பெண்ணே' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Gayathri

02 Oct, 2020 | 04:20 PM
image

நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஓ மணப் பெண்ணே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஓ மணப் பெண்ணே'.

'தாராள பிரபு' என்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தயாராகி இருக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி இளம் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். 

தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற 'பெல்லி சூப்புலு' என்ற படத்தின் தமிழ் ரீமேக் இது. படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,

'தெலுங்கில் வெளியான இப்படத்தைப் பார்த்து நடிகர் ஹரீஷ் கல்யாண் அவர்களை சந்தித்து இப்படத்தின் ரீமேக்கில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அவரும் சம்மதித்தார். 

படத்தின் கதைக்கான டைட்டிலுக்கு காத்திருந்தோம். இந்நிலையில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் இடம் பெற்ற பாடலை கேட்டவுடன் 'ஓ மணப் பெண்ணே' என்ற தலைப்பை தெரிவு செய்தோம். 

இசைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார்' என்றார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை பிரியா பவானி சங்கரும், ஹரிஷ் கல்யாணும் இடம் பெற்றிருக்கும் காட்சி, ரசிகர்களை கவர்ந்திருப்பதால் இப்படமும் வெற்றி பெறும் என்று திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35