புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் சுவிஸ்குமாரின் தாயார் நேற்று (17) இரவு யாழ் சிறைச்சாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

வித்தியாவின் வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, யாழ் சிறைச்சாலை அத்தியட்சகர் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய விடயம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு யாழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.