மதுபானம் என்று சந்தேகிக்கப்பட்ட திரவம், குடிநீர் போத்தல்கள் மீட்பு

Published By: Vishnu

01 Oct, 2020 | 07:39 PM
image

(எம்.மனோசித்ரா)

சுங்க வரி செலுத்தப்படாமல் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானம் என சந்தேகிக்கப்பட்ட அடையாளம் காணப்படாத திரவம் மற்றும் குடிநீர் போத்தல்கள் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

2018 இல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு 2019 நவம்பரில் பங்களாதேஷிற்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாகக் கூறப்படும் 40 அடி கொள்கலன்கயே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு சுங்க வரி செலுத்தப்படாமல் இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. எனினும் இதனை இறக்குமதி செய்த தனியார் நிறுவனம் 2019 நவம்பரில் இவற்றை மீள் ஏற்றுமதி செய்வதாக கூறிய போதிலும் நீண்ட காலமாக அதனைச் செய்யாமல் காலம் தாழ்த்தியுள்ளனர். அதனடிப்படையில் சுங்க திணைக்கள அதிகாரிகளின் நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

தற்போதைய சுங்க திணைக்கள பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவியுடன் சந்தேகநபர்கள் அனைவரும் நேற்று புதன்கிழமை சுங்க திணைக்களத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதில் 11,257 லீற்றர் வெளிநாட்டு மதுபானம் இருப்பதாகக் கூறப்பட்ட போதிலும்,  கொள்கலன்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அவை மதுபானம் அல்ல என்பது கண்டறியப்பட்டதோடு,  ஒரு லீற்றர் கொள்ளளவு கொண்ட தலா 15 போத்தல்கள் அடங்கிய 1179 பெட்டிகளே கைப்பற்றப்பட்டுள்ளன. 

அத்தோடு அடையாளம் காணப்படாத 200 லீற்றர் கொள்ளளவு திரவமும் இதன் போது மீட்க்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாக கூறப்பட்ட இவை சுங்க வரி செலுத்தப்படாமல் உள்நாட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதோடு, இதனால் அரசாங்கத்திற்கு 40 மில்லியன் ரூபா வரி வருமானம் அற்றுப் போயுள்ளது. 

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க திணைக்களம் முன்னெடுத்து வருகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33