தலவாக்கலை - சென். கிளயார் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் தலவாக்கலையில் இருந்து கொட்டகலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கிள் சாரதி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.