எமது சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள் - சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

Published By: Vishnu

01 Oct, 2020 | 09:55 AM
image

எமது சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள். அவர்களை அறிவு ரீதியாக வளப்படுத்தி திறன் விருத்திக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது முழு சமூகத்தினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சர்வதேச சிறுவர்கள் தினத்தை 

பிள்ளைகளின் உள, உடல், ஆரோக்கியத்தை வளப்படுத்துவதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை போன்றே அவர்கள் நற்பண்புள்ளவர்களாக வளர்வதற்கான சூழலை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும்.

ஒரு நாடு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் எவ்வளவு உயர்ந்த அபிவிருத்திப் படிநிலைகளை அடைந்து கொண்டாலும், சமூகம் அன்பு, அறம் போன்ற அடிப்படை மானிடப் பண்புகளைப் பெற்றிருக்கவில்லை என்றால் அதனை ஒரு சிறந்த தேசமாக கருத முடியாது என நான் நம்புகிறேன். 

ஒரு சிறந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் எமது சிறுவர் தலைமுறையை சிறந்த ஒழுக்கப் பெறுமானங்களுடன் தொழிநுட்ப திறன்கள் மற்றும் மொழி அறிவைப் பெற்றவர்களாக வளப்படுத்த வேண்டும்.

உள, உடல். பலவீனங்களிலிருந்து விடுபட்ட பிரஜைகளைக் கொண்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதுவே எனது ஒரே எதிர்பார்ப்பாகும். அத்தகையதொரு நாட்டிலேயே சிறுவர்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மனநிறைவாகவும் வாழ்வதற்கான உறுதியான உத்தரவாதம் இருக்கும். 

இத்தகையதொரு தேசத்தின் நன்மைகளை அனுபவித்து மகிழும் ஒரு தலைமுறையை கட்டியெழுப்புவதற்கு உங்களது பிள்ளைகளின் சிறு பராயத்தை நீங்கள் மிகுந்த பொறுப்புடன் நெறிப்படுத்துவீர்களென நான் எண்ணுகின்றேன். 

அப்போதுதான் 'எமது தேசத்தை நாமே கட்டியெழுப்புவோம்' என்ற இவ்வருட உலக சிறுவர் தின கருப்பொருளை யதார்த்தமாக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47