கண்டி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததன் எதிரொலி; கட்டிடங்கள் நிர்மாணத்திற்கு புதிய நடைமுறை

Published By: Vishnu

30 Sep, 2020 | 08:02 PM
image

அனர்த்த நிலையைக் கொண்டதாக கருதப்படும் கட்டிடங்களை அடையாளம் காண்பதற்கும், புதிதாக கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கும் போதும் புதிய நடைமுறை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக  நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள் தொடர்பில் விடயங்களைக் கண்டறிவதற்கு உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கு புவி சரிதவியல் அகழ்வு பணியகத்தினால் விஷேட பயிற்சி வழங்கப்படவுள்ளது.

கண்டியில் பூவெலிகடயில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இடிந்து விழுந்த பெரும்பாலான கட்டிடங்கள் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் அனுமதியைப் பெற்ற கட்டிடங்கள் என அடையாளம் காணப்படிருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கண்டியில் பூவெலிகடயில் இடிந்து விழுந்த கட்டிடம் தொடர்பில் கட்டிட ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட விசாரணை அறிக்கை இன்று மத்திய மாகாண ஆளுநரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதன் உரிமையாளர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- அரசாங்க தகவல் திணைக்களம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20