'இலங்கையில் அவதானம் குறைந்தால் கொரோனா மீண்டும் தலை தூக்கலாம்': சுகாதார அமைச்சு எச்சரிக்கை..!

Published By: J.G.Stephan

30 Sep, 2020 | 05:20 PM
image

(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இன்னும் குறைவடையவில்லை. இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் மாத்தறையில் வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டமையும் அவருடன் தொடர்பைப் பேணியவர்கள் முறையாக தனிமைப்படுத்தலை பூரணப்படுத்தாமையுமாகும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தற்போது நாட்டிலுள்ளவர்கள் தொற்றுக்குள்ளாகி இனங்காணப்படுவதில்லை. மாறாக வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்களும் வெளிநாட்டவர்களுமே தொற்றுடன் இனங்காணப்படுகின்றனர். ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

எனினும் இதற்காக அடிப்படை பாதுகாப்பு விதிமுறைகளை மறந்து கவனயீனமாக செயற்படக் கூடாது. கடந்த வாரம் ரஷ்ய விமான பணியாளருக்கு தொற்று இனங்காணப்பட்டது. எனினும் அவருடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் பலர் முறையாக அதனை பின்பற்றவில்லை. சிலர் 14 நாட்கள் நிறைவடைவதற்கு முன்னரே வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அவ்வாறானவர்களும் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தலை பூரணப்படுத்தாதவர்களின் எவருக்கேனும் தொற்று ஏற்பட்டுள்ளமை இனங்காணப்பட்டால்  அது ஆபத்தான நிலைமையாகும். காரணம் அவர் மூலம் அவரது குடும்பத்தினரும் ஏனையோரும் தொற்றுக்குள்ளாகக் கூடும். இவ்வாறான பாதிப்புக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே அடிப்படை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

சட்டத்தின் மூலம் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றச் செய்வது நடைமுறைச்சாத்தியமற்றதாகும். இது வரையில் எவ்வாறு இலங்கையில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறதோ அதே நிலைமையை தொடர்ந்தும் பேணுவதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகிறது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08