கொவிட் 19 தொற்றுநோயை எதிர்கொண்டமை தொடர்பில் 05 ஆசிய நாடுகளின் தூதுவர்கள் பாராட்டு!

Published By: R. Kalaichelvan

30 Sep, 2020 | 03:32 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

இலங்கையில் கொவிட் 19 தொற்றுநோயை வெற்றிகரமாக எதிர்கொண்டமை தொடர்பில் 05 ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) நாடுகளின் தூதுவர்கள் அரசாங்கத்தை பாராட்டியுள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது கொவிட் 19ஐ கட்டுப்படுத்துவதில் அரசு மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் பாராட்டப்பட்டது.

முறையான திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் கொவிட் 19ஐ முறியடித்த நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு நாடுகளினதும் கொவிட் 19 நிலைமைகள் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகருடனான இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. ஆசியான் நாடுகள் இலங்கையுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளை பாராட்டிய சபாநாயகர், எதிர்காலத்திலும் இலங்கை இந்த நல்லுறவை பேணுவது தொடர்பில் வலியுறுத்தினார்.

இதேவேளை, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மலேசிய தூதுவர் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களை மலேசியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார். தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் பாராளுமன்ற அமர்வுகளில் பார்வையாளராக கலந்துகொள்ளுமாறு குறித்த தூதுவர்கள் இதன்போது இலங்கையிடம் கோரிக்கை விடுத்தனர். 

இந்த கோரிக்கை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், இது தொடர்பான எழுத்துமூல அழைப்பிதழை இலங்கை பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைப்பதாகவும் தெரிவித்தனர். இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் டன் யாங் க்தாய், வியட்நாம் தூதுவர் பாம் தி பிச் நொகோக், இந்தோனேசிய தூதுவர் குஸ்டி நுரா அர்தியாசா, தாய்லாந்து தூதுவர் ச்சுலமணி சார்ட்சுவன், மியன்மார் தூதுவர் ஹான் து ஆகியோர் ஆசியான் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58