இலங்கை போக்குவரத்து சபையின் ஏறாவூர் சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்று மட்டக்களப்பு தன்னாமுனை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் சுமார் 6 பேர்  சிறு காயங்களுக்குள்ளாகினர்.

வாழைச்சேனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸின் அதிகரித்த வேகமே இதற்குக் காரணமென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவயவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.