வோர்னர் தலைமையிலான ஐதராபாத்தை தோற்கடிக்குமா அய்யர் தலைமையிலான டெல்லி?

Published By: Vishnu

29 Sep, 2020 | 09:34 PM
image

ஜோனி பெயர்ஸ்டோவின் அரைசதத்துடன் டெல்லிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 162 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 11 ஆவது போட்டி டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஐதராபாத் , ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேட்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையில் இன்றிரவு 7.30 மணிக்கு அபுதாபியில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது களத்தடுப்பினை தேர்வு செய்ய ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய ஜோனி பெயர்ஸ்டோ மற்றும் டேவிட் வோர்னர் டெல்லியின் பந்து வீச்சுகளுக்கு சிறப்பாக முகங்கொடுத்து விக்கெட் இழப்பின்றி ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தனர்.

நான்கு புறங்களிலும் இவர்கள் அடித்தாட ஐதராபாத் அணி 7 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 52 ஓட்டங்களை குவித்தது. இந் நிலையில் டேவிட் வோர்னர், 10 ஓவரின் மூன்றாவது பந்தில் அமித் மிஷ்ராவின் பந்து வீச்சில் ரிஷாத் பந்திடம் பிடிகொடுத்து 45 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய மனீஷ் பாண்டேயும் வந்த வேகத்திலேயே மிஷ்ராவின் சுழலில் சிக்குண்டு மூன்று ஓட்டங்களுடன் நடையை கட்டினார்.

இதனால் ஐதராபாத் 11.2 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 92 ஓட்டங்களை குவித்தது.

அதன் பின்னர் பல நாள் காத்திருப்பின் பின்னர் ஆடுகளம் புகுந்த ஐதராபாத் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியன்சன் பெயர்ஸ்டோவுடன் கைகோர்த்து, அவருக்கு பக்கபலமாக இருந்தார்.

ஒரு பக்கம் கேன் வில்லியன்சன் அடித்தாட, மறுபக்கம் 18 ஆவத ஓவரின் முதலாவது பந்து வீச்சில் பெயர்ஸ்டோ 44 பந்துகளில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகள் அடங்கலாக அரைசதம் கடந்தார்.

எனினும் அதே ஓவரின் ஐந்தாவது பந்தினை உயர்த்தி அடித்த பெயர்ஸ்டோ அன்ரிச் நார்ட்ஜேவிடம் பிடிகொடுத்து 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் (144-3).

4 ஆவது விக்கெட்டுக்காக அப்துல் சமட் களமிறங்க கேன் வில்லியம்சன் 20 ஆவது ஓவரின் மூன்றாவது பந்து வீச்சில் மொத்தமாக 26 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவ்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது.

ஆடுளத்தில் அப்துல் சமட் 12 ஓட்டங்களுடனும், அபிஷேக் சர்மா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் ரபடா மற்றும் மிஷ்ரா தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

Photo Credit ; IPL

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20