லங்காசோய் வர்த்தகநாமத்திற்கு தங்க விருது

Published By: Priyatharshan

10 Dec, 2015 | 02:08 PM
image

சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் (CBL)நிறுவனத்தின் துணை நிறுவனமான கன்வீனியன்ஸ் ஃபூட்ஸ்(லங்கா) பிஎல்சி நிறுவனத்தின் முன்னணி வர்த்தகநாமமான லங்காசோய், இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் மூலம் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் 2015 இல் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உற்பத்தி (உணவு மற்றும் குடிபானம்) பிரிவில் தங்க விருதை வென்றெடுத்துள்ளது.

தொழிற்துறையில் 25 வருடகால அனுபவத்தை கொண்டுள்ள லங்காசோய், சோயா உற்பத்தி துறையில் சந்தை தலைமைத்துவத்தையும், முன்னோடியாகவும் திகழ்கிறது. 

சந்தையில் புதிதாக உட்பிரவேசிக்கும் நேரத்தில் சோயா உற்பத்திகளுக்கான தர நிர்ணயங்கள் மிக அரிதாகவே காணப்பட்டதுடன், உள்நாட்டில் SLS தரத்தை பெற்ற முதல் நிறுவனமாக இந் நிறுவனம் திகழ்கிறது. 

ஆரம்பத்தில் கைகளினால் செயல்பாடுகளை முன்னெடுத்த இந் நிறுவனம் படிப்படியாக அதன் செயல்பாடுகளை தன்னியக்க முறைக்கு மாற்றியமைத்து, தரம் வாய்ந்த உற்பத்தி எனும் அதன் ஸ்தானத்தை மேலும் உறுதி செய்து வருகிறது. 

இதன் உற்பத்தி செயல்பாடுகள் ISO 9001:2008, ISO 22000:2005, GMP, HACCP சான்றிதழ்களை பெற்றுள்ளன.

புத்துருவாக்கம் மற்றும் தலைமைத்துவம் ஊடாக லங்காசோய் தொடர்ந்து புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய சுவைகள் மற்றும் வடிவங்களை அறிமுகப்படுத்தி தொழிற்துறையின் தரத்தை உறுதி செய்து வருகிறது. இலங்கையில் சோயா புரதத்தின் (சோயா மீற்) முன்னணி வர்த்தகநாமமான லங்காசோய் அண்மையில் icook ‘ஸ்டர் ஃப்ரை’ எனும் சோயா மீற் உற்பத்தியை இலங்கை சந்தைகளில் அறிமுகம் செய்திருந்தது. சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை எளிமையாக சமைக்க விரும்பும் இளைஞர்களுக்கேற்ற வகையில் இத் தெரிவுகள் அமைந்துள்ளன. 

இலங்கையின் சோயா சந்தையில் இந்த நிறுவனம் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிறுவனம் தற்போது அதன் உற்பத்திகளை பிரதானமாக பன்முக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதுடன், எதிர்காலத்தில் சர்வதேச சந்தைகளிலும் அதன் உற்பத்திகளை விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளது.

பன்முக மரபினை தொடர்ச்சியாக பேணும் கன்வீனியன்ஸ் ஃபூட்ஸ்(லங்கா) நிறுவனம் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான, சுவைமிக்க தானியங்களின் போசாக்கு நிறைந்த தானிய ஆகாரமாக Nutriline (நியூட்ரிலைன்) சீரியல் தெரிவுகளை மூன்று சுவைத் தெரிவுகளில் அறிமுகம் செய்தது. 

இந்த புதிய சீரியல் தெரிவுகள் இயற்கையான மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், சர்வதேச தர நிர்ணயங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு மூலப்பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மற்றுமொரு ஆரோக்கியமான பேக் செய்யப்பட்ட சிற்றுண்டியாக ரம்பா திகழ்கிறது. இவை ஐந்து தெரிவுகளில் கிடைக்கின்றன.

“வாடிக்கையாளருக்கு பெறுமதி சேர்ப்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். எமது தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தி செயல்பாடு காரணமாக சந்தையில் புதிய சோயா தயாரிப்புகளை அறிமுகம் செய்ய எம்மால் முடிந்துள்ளது” என கன்வீனியன்ஸ் ஃபூட்ஸ் (லங்கா) பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திலங்க டி சொய்சா தெரிவித்தார். 

சுற்றுச்சூழல் மற்றும் நிதி நிலைமைகள் மீதான எமது உறுதியான அர்ப்பணிப்பானது வாடிக்கையாளருக்கு அனுகூலங்களை வழங்க வழிவகுத்துள்ளது” என மேலும் தெரிவித்தார்.

லங்காசோய் வர்த்தகநாமம் அதன் வணிக செயற்திறனுக்கு அங்கீகாரமாக SLIM வருடத்திற்கான சிறந்த வர்த்தகநாமம், உற்பத்தி திறன் விருது மற்றும் CNCI சாதனையாளர்கள் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றெடுத்துள்ளது.

லங்காசோய் தயாரிப்பில் புரதம் அதிகளவு நிறைந்துள்ளதுடன், கொழுப்பு சத்து உள்ளடக்கப்பட்டில்லை. மரபணு சாராத கொழுப்பு நீக்கிய சோயா மா பயன்படுத்தி லங்காசோய் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57
news-image

யாழில் முதல் முறையாக மருந்து வில்லைகள்...

2024-03-11 16:16:39
news-image

KIST தனது சோஸ் வகைகளை புதிய...

2024-03-08 10:44:09
news-image

முன்னேற்றத்தின் பங்காளியாக 135 ஆண்டுகால பெருமை...

2024-03-06 17:32:13
news-image

பிரீமியம் அந்தஸ்தை பெற்றுள்ள Radisson Hotel...

2024-03-04 16:26:08
news-image

பான் ஏசியா வங்கி 2023 நிதியாண்டில்...

2024-02-26 16:45:55
news-image

புரத தினம் 2024: இவ்வருடத்தின் எண்ணக்கரு...

2024-02-26 16:58:38
news-image

Sun Siyam பாசிக்குடாவில் உள்நாட்டவர்களுக்காக விசேட...

2024-02-26 16:58:18