சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

Published By: Vishnu

28 Sep, 2020 | 08:39 PM
image

கொழும்பில் பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி நிரல் சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்று முதல் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து வாகன கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகருமான இந்திக்க ஹப்புகொட இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு வார காலமாக வீதி நிரல் சட்டம் தொடர்பில் சாரதிகளுக்கு தெளிவுபடுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் வீதிநிரல் சட்டத்தை மீறிய நபர்கள் நேற்று முன்தினம் அழைக்கப்பட்டு அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வகுப்புக்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வீதிகளில் உள்ள மின்சார சமிஞ்சை தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஹப்புகொட தெரிவித்தார். கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் ஒரு வார கால ஒத்திகையாக வீதி நிரல் சட்டம் நடைமுறைப்படுத்தும் பணி ஆரம்பமானது.

இதன்போது பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் கடந்த 21 ஆம் திகதி தொடக்கம் வீதி நிரல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இதற்கு அமைவாக கொழும்பு பிரதான 4 வீதிகளை கேந்திரமாக கொண்டு வீதி நிரல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

காலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58