19 ஆவது மற்றும் 20 ஆவது திருத்தங்கள் குறித்து எதுவும் கூற மாட்டேன் - மஹிந்த தேசப்பிரிய

28 Sep, 2020 | 05:30 PM
image

(எம்.மனோசித்ரா)

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக நான் தற்போதும் இருப்பதால் 19 ஆவது மற்றும் 20 ஆவது திருத்தங்கள் பற்றி எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கப் போவதில்லை.

இருந்த போதிலும் சிறந்த அரசியலமைப்பொன்று உருவாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதோடு அந்த புதிய அரசியலமைப்பில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

பிரதேசங்களில் வீதி புனரமைப்புகள், பாடசாலை அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை மாத்திரம் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை. அந்த பொறுப்புக்களை மாகாணசபை உறுப்பினர்களிடம் ஒப்படைக்க முடியும்.

எனவே மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

'ஜனநாயகத்திற்காக இளைஞர்கள் - 2020 ' என்ற தொனிப்பொருளில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளம் அரசியல்வாதிகள் பங்குபற்றிய நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, மத்தியவங்கி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிடுகையில்,

2014 ஆம் ஆண்டு உலக ஜனநாயக தினம் மற்றும் சர்வதேச இளைஞர் தினம் ஆகிய இரண்டையும் ஒன்றாக கொண்டாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் போது 'இளைஞர்களுக்கு ஜனநாயகம் அவசியம்: ஜனநாயகத்திற்கு இளைஞர்கள் அவசியம்' என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது. 

ஆனால், நாம் தற்போது முன்னுரிமை கொடுத்திருப்பது ஜனநாயகத்திற்காக இளைஞர்கள் என்ற கூற்றுக்காகும்.

ஜனநாயகம் என்பது நினைக்கின்ற அனைத்தையும் செய்வதல்ல. மாறாக ஏனையோருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் செயற்படுவதாகும். 

அரசியலமைப்பும் சட்டங்களும் உருவாக்கப்படும் போது மக்களின் நிலைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நிகழ்வில் கலந்து கொண்டுள்ள இளம் அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இது வரவேற்கத்தக்க விடயமாகும்.

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பது மாத்திரம் அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பல்ல. அவர்கள் நேரடியாக அரசியலில் பங்குபற்ற வேண்டும். 

தற்போது அமைச்சுக்கு கிடைக்கப் பெறும் நிதியையும் வேலை வாய்ப்புக்களையும் எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதிலேயே பெரும்பாலான அரசியல்வாதிகள் கவனம் செலுத்துகின்றனர். மாறாக சட்டத்தை உருவாக்குவதில் அல்ல.

கிரிக்கட் போன்ற விளையாட்டுக்களில் அணி தலைவர்கள் இருப்பார்கள். அந்த தலைமைத்துவம் அணியை வழிநடத்துவதற்காகவேயாகும். 

எனினும் ஏனைய விடயங்களில் அந்த அணிக்குள் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் அனைத்து விடயங்களிலும் சம உரிமையே வழங்கப்படும். இதுவே ஜனநாயகமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40