ரி.விரூஷன்

யாழ்ப்பாண பல்கலைகழத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான கலவரத்தையடுத்து பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைகழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ் பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களால் ஏற்பாடு செய்பட்டிருந்த முதலாம் வருட மாணவர்களுக்குகான வரவேற்ப்பு நிகழ்வில் வழமைக்கு மாறான முறையில் கண்டிய நடணத்தை நடாத்தமுற்பட்டதையடுத்து தமிழ் சிங்கள மாணவர்களிடையே முரண்பாடு ஏற்ப்பட்டு பாரிய கலவரமாக உருப்பெற்றிருந்தது.

இவ் சம்பவத்தையடுத்து இன்றைய  தினம் யாழ் பல்கலைகழகத்தில் விஷேட பேரவைக் கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இக் கூட்டத்தின் ஊடாக யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டு அது தொடர்பான அறிவுறுத்தல் பல்கலைகழக பதிவாளரால் வெளியிடப்பட்டது.

மேலும் விரிவுரையாளர்களும் மாணவர்களும் அனைத்து பீடங்களின் கல்விசார் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்திருப்பதாகவும் மேலும் பல்கலைகழக நிர்வாகம் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு ஏற்ற பாதுகாப்பான சுழலை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதனையும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் தெரிவிப்பதாக பல்கலைகழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.