பஞ்சாப்பை நம்ப வைத்து ஏமாற்றிய ராகுல் திவேதியா! நடந்தது என்ன?

Published By: Sajishnavan

28 Sep, 2020 | 04:10 PM
image

19 பந்துகளில் 8 ஓட்டங்களை பெற்ற ராகுல் திவேதியா பஞ்சாப்பின் இமாலய இலக்கை இலகுவாய் தாண்ட வழி கோலிவிட முடியும் என்று யாருமே கனவு கூட கண்டிருக்கவில்லை.

மயங்கின் சதம், ராகுலின் அரைச்சதம் என்று Orange Cap எனக்கா உனக்கா என்று போட்டி போட்டு போட்டிக்கு ஒருவர் பஞ்சாப்பில் சதமடித்து வருகின்றனர். இந்த ஐ.பி.எல்லின் மிக சிறந்த ஆரம்ப ஜோடியாக தங்களை நிலை நிறுத்தியிருக்கிறது பஞ்சாப்.

முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் இது வரை துரத்தப்படாத இலக்கான 223 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கு அடிக்கல் நாட்டியது போல் நம்பிக்கையுடன் முதல் இன்னிங்க்ஸை முடித்திருந்தது பஞ்சாப்.

அதிரடியை விட சிறந்த ஷாட்களை தேர்ந்தெடுத்து சரியான நேரத்தில் பந்துகளை பதம் பார்த்து மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட இன்னிங்ஸ் அது. 

கே.எல்.ராகுல் அணியின் தலைமைப் பொறுப்பையேற்றத்துடன் அணியை முன்னின்று வழிநடத்துவதாக அணியின் பயிற்றுநரான கும்ப்ளே உள்ளிட்ட பலர் கடந்த போட்டியில் அடித்த சத்தத்தின் பின்னர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதன் பிரதிபலிப்பாகவே இன்றைய போட்டியும் அமைந்திருந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ராஜஸ்தான் அணிக்கு இம்முறை பெரிய பலமென்று பலரும் எதிர்பார்த்த வீரர் ஜோஸ் பட்லரும் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தும் 224 என்ற இலக்கை நோக்கி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.

அதிரடியாய் ஆடி அணியின் ஓட்ட வேகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் என்று எண்ணிய பட்லரிடம் ரசிகர்களுக்கு 7 பந்துகளில் 4 ஓட்டங்களோடு வெளியேறிய ஏமாற்றமே மிஞ்சியது.

அடுத்த வீரராக இளம் வீரரான சஞ்சு சாம்சன் களமிறங்கினார். ஏற்கனவே கடந்த போட்டியில் அணித்தலைவர் ஸ்மித் சாம்சனின் துடுப்பாட்டத்தை பார்த்து " அவரோடு ஆடுவது எனக்கு மிகவும் இலகுவாய் இருந்தது. அவர் மிகச்சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தார். நான் அவருக்கு சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுப்பதை மட்டுமே செய்ய வேண்டி இருந்தது" என்று கூறியிருந்தார்.

ஏறத்தாழ இந்த போட்டியிலும் அதையே தான் செய்திருந்தார். ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்புக்களை முடிந்தவரை ஓட்டங்களைப் பெறவும் பயன்படுத்திக்கொண்டார் ஸ்மித். இந்த ஜோடியின் இணைப்பாட்டம் வலுவான ஒரு நிலைக்கு அணியை அழைத்து சென்ற நேரம் ஜிம்மி நீஷம் வீசிய போட்டியின் 8வது ஓவரின் இறுதிப்பந்தில் 50 ஓட்டங்களை பெற்றிருந்த ஸ்மித் ஆட்டமிழந்தார்.

4ம் இலக்க வீரராக சகலதுறை வீரர் ராகுல் திவேதியா களமிறக்கப்பட்டார். மறுபுறத்தில் சாம்சன் வேகமாக ஆடினாலும் திவேதியாவால் ஓட்டங்களைப்பெற முடியவில்லை. இந்நிலையில் சதத்தை நோக்கி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த சாம்சன் 85 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஷமியின் பந்து வீச்சில் விக்கட் காப்பாளர் ராகுலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அணி தோல்வியின் விளிம்புவரை சென்றது.

திவேதியா தான் முகம்கொடுத்த முதல் 19 பந்துகளில் வெறும் 8 ஓட்டங்களை பெட்ரா நிலையில் ஆடிக்கொண்டிருக்க மறுமுனையில் ரொபின் உத்தப்பா களம் புகுந்தார்.

ஸ்மித் திவேதியாவை 4வது இலக்கத்தில் அனுப்பியதற்காக ரசிகர்கள் திட்டித்தீர்த்துக்கொண்டிருந்த நேரம் 18வது ஓவரை வீசுவதற்காக கொட்ரெல் அழைக்கப்பட்டார். 23 பந்துகளில் 17 ஓட்டங்களை பெற்றிருந்த திவேதியா இந்த ஓவரின் முதல் 4 பந்துகளையும் சிக்ஸர்களாக விளாசினார். 6 பந்துகளுக்கும் சிக்ஸர் அடித்து இன்னொரு சாதனை படைப்பார் என்று எதிர்பார்த்திருந்த நேரம் 5வது பந்துக்கு ஓட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் 6வது பந்தை எல்லைக்கோட்டுக்கு வெளியே அடித்து இன்னோர் 6 ஓட்டத்தை பெற்று அந்த ஓவரில் மட்டும் 30 ஓட்டங்களை குவித்தார்.

யாரால் போட்டி கை நழுவி போனதாக அவ்வளவு நேரம் விமர்சித்தார்களோ அவராலேயே மீண்டும் போட்டி கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே உத்தப்பா ஆட்டமிழக்க இங்கிலாந்து வீரரான ஆர்ச்சர் தான் சந்தித்த முதல் இரு பந்துகளையும் சிக்ஸராக விளாசி அடுத்த பந்தில் ஒரு ஓட்டம் எடுத்தார். ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட திவேதியா மீண்டும் ஒரு சிக்ஸரை விளாசி 50 ஓட்டங்களை பூர்த்தி செய்தார்.

அடுத்த பந்திலேயே திவேதியா ஆட்டமிழக்க பின்னர் வந்த கரன் நான்கு ஓட்டமொன்றை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

யாருமே எதிர்பாராத விதமாக ராஜஸ்தான் அணி ஐ.பி.எல் வரலாற்றின் அதிகூடிய இலக்கை துரத்தி வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்னர் 2008ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 215 ஓட்டங்களை துரத்தி வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. மேலும் ஒரு போட்டியின் வெற்றிகரமான இரண்டாம் இன்னிங்சில் அதிக ஓட்டங்களை பெற்ற அணியென்ற பெருமையையும் ராஜஸ்தான் அணி 86 ஓட்டங்களை பெற்றதன் மூலம் பெற்றுக்கொண்டது.

போட்டியின் நாயகனாக ராஜஸ்தான் அணியின் சாம்சன் தெரிவானதுடன் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்திய பெருமையை திவேதியா பெற்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேளி...

2024-03-18 20:09:27
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44
news-image

றோயலை 30 ஓட்டங்களால் வென்று மஸ்டாங்ஸ்...

2024-03-17 06:28:44
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட திரித்துவம் -...

2024-03-16 21:29:46
news-image

நுவரெலியா நகர்வல ஓட்டத்தில் தலவாக்கொல்லை வக்சன்...

2024-03-16 20:08:07