சார்ஜாவில் நிலை கொண்ட பஞ்சாப் புயல்

Published By: Vishnu

27 Sep, 2020 | 09:11 PM
image

மயங் அகர்வார்வால் மற்றும் ராகுலின் விட்டுக் கொடுக்காத அதிரடி ஆட்டத்தினால் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 223 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் ஒன்பதாவது போட்டி இன்றைய தினம் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் சார்ஜாவில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை பஞ்சாப்பிற்கு வழங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பஞ்சாப் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ராகுல் மற்றும் அகர்வாலின் நிலையானதும், வலுவானதுமான ஆட்டத்தினால் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சு வியூகங்கள் தவிடுபொடியான.

ராஜஸ்தானின் பந்து வீச்சுகளை அனைத்து திசைகளிலும் இவர்கள் அடித்தாட பஞ்சாப் அணி 5 ஓவர்களின் நிறைவில் 58 ஓட்டங்களையும், 10 ஓவர்களின் நிறைவில் 110 ஓட்டங்களையும், 15 ஆவது ஓவர்களின் நிறைவில் 172 ஓட்டங்களையும் பெற்றது.

இதனிடையே ராஜஸ்தானின் பந்துகளை பதம் பார்த்த அகர்வால் 14.6 ஆவது ஓவரில் மொத்தமாக 45 பந்துகளை எதிர்கொண்டு 7 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக சதம் விளாசினார்.

ஐ.பி.எல். அரங்களில் அவர் பெறும் முதல் சதம் இதுவாகும்.

எனினும் அகர்வால் 16.3 ஆவது ஓவரில் அகர்வால் மொத்தமாக 50 பந்துகளை எதிர்கொண்டு 106 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ராகுல் 17.6 ஆவது ஓவரில் மொத்தமாக 54 பந்துகளில் 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார் (194-2).

தொடர்ந்து 3 ஆவது விக்கெட்டுக்காக மெக்ஸ்வெல் நிகோலஷ் பூரண் ஆகியோர் துடுப்பெடுத்தாட பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 203 ஓட்டங்களை குவித்தது.

இறுதியாக பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 223 ஓட்டங்களை குவித்தது

ஆடுகளத்தில் நிகோலஷ் பூரண் 25 ஓட்டங்களுடனும், மெக்ஸ்வெல் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

Photo Credit : ‍ IPL

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07