20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர் மூண்டுள்ளது: புபுது ஜயகொட

Published By: J.G.Stephan

27 Sep, 2020 | 05:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்தினால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் பனிபோர்     ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நாட்டு மக்கள் முதலில்  தெளிவுப்பெற வேண்டும். பெரும்பான்மை பலத்தை பெற மக்கள் மத்தியில் முன்வைத்த விடயங்களை அரசாங்கம் தற்போது செயற்படுத்தாமல் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகிறது என    முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  இரண்டு பிரதான தேசிய தேர்தல்களின் போது நாட்டு மக்களுக்கு  பல்வேறு   வாக்குறுதிகளை வழங்கியது. பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் மக்கள்   பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கினார்கள். ஆட்சியதிகாரத்துக்கு வந்த பின்னர் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள்    திசைத் திரும்பியுள்ளது.

மேல்மட்ட வர்க்கத்தினருக்கு  சார்பாகவே அரசாங்கம் பல  தீர்மானங்களை எடுத்துள்ளது. நடுத்தர மக்கள்  நன்மை பெறும் திட்டங்கள்  ஏதும் முன்வைக்கப்படவில்லை. திட்டங்கள் பெயரளவில் மாத்திரமே செயற்படுத்தப்படுகிறது. பொதுப்போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கத்தின் கொள்கை  புதிதாக  அறிமுகப்படுத்தி வீதி போக்குவரத்து  ஒழுங்குமுறை ஊடாக அறிந்துக் கொள்ளலாம். இதிலும் நடுத்தர மக்களே   பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 அரசியமைப்பின்  20 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில்  பனிபோர் மூண்டுள்ளது. வர்த்தமானியில் வெளியாக 20 ஆவது திருத்தத்தை மீளாய்வு செய்ய பிரதமர்  9 பேர் அங்கிய மீளாய்வு குழுவை நியமித்தார். 20 ஆவது திருத்தில் குறைப்பாடுகள் காணப்படுகின்ற காரணத்தினால் தான் திருத்தம் மீயாள்வு செய்யப்பட்டுள்ளது.

  வாழ்க்கை  செலவுகள் நாளாந்தம்  உயர்வடைந்த நிலையில் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் 20 ஆவது திருத்தத்தினால் அரசாங்கம் முரண்பாடுடன் செயற்படும் போது அதன் விளைவையும் நாட்டு மக்கள் எதிர்க்கொள்ள  நேரிடும். ஆகவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து  நாட்டு மக்கள்  அவதானம் செலுத்த வேண்டும்.  அரசாங்கம்  தவறான வழியில் செல்லும் போது தவறை சுட்டிக்காட்டும் உரிமை மக்களுக்கு உண்டு என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41