வற் வரி தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

Published By: Robert

17 Jul, 2016 | 03:38 PM
image

வற் வரி விதிப்பின் காரணமாக ஏற்படகூடிய பாதிப்புகளை ஆராய்வதற்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் நியமிக்கப்பட்ட குழுவினது அறிக்கை இவ்வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கையில் நான்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி வற் வரி தொடர்பிலான குழுவினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நியமித்திருந்தார். இந்த குழுவில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த அமரவீர மற்றும் டிலான் பெரேரா ஆகியோரே இக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.

வற்வரி அதிகரிக்கப்பட்டமையின் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இதன்காரணமாக நாடுபூராகவும் மக்கள் போரட்டங்களில் ஈடுப்பட்டனர். இதன்படி பொது எதிரணியினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பிரகாரம் தற்போதைக்கு வற் வரி 15 சதவீத அதிகரிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போதைய 11 சதவீதமே அமுலில் உள்ளது. 

இருந்தபோதிலும் வற்வரி தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர்  நீதிமன்றத்தின் இரத்து செல்லுப்படியாகாது. இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி சமர்ப்பிக்கவிருந்த குறித்த சட்டமூலம் சுதந்திரக் கட்சியினரால் பிற்போடப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த விடயத்தில் தேசிய அரசாங்கத்தில் உட்பூசலான நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வற் வரி விதிப்பின் காரணமாக ஏற்படகூடிய பாதிப்புகளை ஆராய்வதற்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் நியமிக்கப்பட்ட குழுவினது அறிக்கை அடுத்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08