சர்வதேச ARC விருதுகளில் “இலங்கையில் சிறந்தது” என்ற உன்னதமான விருதினை வென்ற மக்கள் வங்கி!

26 Sep, 2020 | 12:50 PM
image

சர்வதேச ARC விருதுகளில் “இலங்கையில் சிறந்தது” என்ற உன்னதமான விருதினை வென்றமைக்காக மக்கள் வங்கி அதன் குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தது.

மக்கள் வங்கியின் தலைவர் திரு. சுஜீவ ராஜபக்ஷ மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரிஃ பொது முகாமையாளர் திரு. ரஞ்ஜித் கொடிதுவக்கு அண்மையில் சர்வதேச ARC விருதுகளில் “Frontier” என தலைப்பிடப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கைக்கு “இலங்கையில் சிறந்தது” என்ற உன்னதமான விருதினை வெல்வதற்கு காரணமாய் அமைந்த வங்கியின் குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இதற்கு மேலதிகமாக வங்கியானது மேலும் 5 விருதுகளை முறையே 2 தங்கம் மற்றும் 3 வெள்ளி விருதுகளை வென்றது. 

சர்வதேச ARC விருதுகள் நிதியியல் துறைக்கான வருடாந்த ஆண்டறிக்கைகளுக்கான அகடமி விருதாக கருதப்படுகிறது. இது 30 வருடகாலங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இப்போட்டி உலகம் முழுவதும் உள்ள வேறுபட்ட துறைகளில் மாறுபட்ட தன்மை மற்றும் நோக்கம் கொண்ட பெருநிறுவன மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது.

இந்த வெற்றியைப் பற்றி மக்கள் வங்கியின் தலைவர் திரு. சுஜீவ ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், 

“இம்மாபெரும் விருதின் வெற்றி மக்கள் வங்கிக்கு முதன் முறையாகும். 29 நாடுகளிலிருந்து பெறப்பட்ட 1690 சமர்ப்பிப்புக்களில் 30க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நீதிபதிகள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட சுயாதீனமான மதிப்பீடுகளில் 2019ஆண்டறிக்கைக்காக கிராண்ட் விருது வென்ற உலகில் சிறந்த 50 பேரில் ஒருவராக இருப்பதானது உண்மையில் பெருமைக்குரியது. கண்களை ஈர்க்கக்கூடிய மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்த ஆண்டறிக்கை, நாம் முகம் கொடுத்த சவால்மிகு நேரங்களையும், மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களையும் கடந்து வந்த பாதையை இந்த வெற்றி நினைவூட்டுகிறது. அரச நிறுவனம் என்ற வகையில் எமது ஆண்டறிக்கையின் கட்டமைப்பானது சிறந்த நடைமுறைகளுக்கேற்ப மட்டுமல்லாது, சர்வதேச விருது வென்ற நிலைப்பாடுகளில் நாம் இருக்கிறோம் என்பதனையும், எங்கள் குழுவே அதற்கு பொறுப்பு என்பதனையும் நிரூபித்துள்ளோம். எமது சக பணிப்பாளர் குழு உறுப்பினர்களுடன் இணைந்து, குறிப்பிடத்தக்க இந்த சாதனைக்காக எமது முழு நிதிக் குழுவுக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் வங்கியினரான நாம் எமது வங்கி ஊழியர்களை எமது பொக்கிஷமாகக் கருதுவதுடன் எமது முழுமையான பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனத் தெரிவித்தார். 

இவ்விருதுகள் பற்றி மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர்  திரு. ரஞ்சித் கொடிதுவக்கு கருத்து தெரிவிக்கையில், 

“எமது அனைத்து பங்குதாரர்களின் வணிக நடவடிக்கைகளுக்கும்; தரவுகள் மற்றும் தரங்கள் ரீதியான கண்ணோட்டத்துடன் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய நலன்களை வழங்குவதற்கான உந்துதலுக்கும் இந்த வெற்றி ஒரு சிறந்த சான்றாகும். எமது பெருநிறுவன செயற்பாடுகளுக்கு பங்குதாரர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது ஆகும். அத்தோடு இந்த வருடாந்த ஆண்டறிக்கை இந்நோக்கத்துக்கு மிகவும் முக்கியமானதொரு கருவியாகும். எமது முழு நிதிக்குழுவினதும் முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும். எமது வணிக நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களையும் தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்காக மிகுந்த நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் எதிர்காலத்தை எதிர்ப்பார்க்கிறோம்.” எனத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57