காணி விவகார நீதிமன்றத்தை ஸ்தாபிக்க தீர்மானம்!

25 Sep, 2020 | 03:40 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 மக்கள் மத்தியில் நெடுகாலமாக காணப்படும் காணி  தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு  காண மாவட்ட அடிப்படையில் காணி விவகார நீதிமன்றத்தை ஸ்தாபிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்.  இதற்கான யோசனையை  அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும்  காணி விவகார அமைச்சர் எஸ். எம். சந்ரசேன தெரிவித்தார்.

  அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

பொது மக்கள் மத்தியில்  காணப்படும்  பெரும்பாலான பிரச்சினைகளுக்கு  காணி,  பிரதான  காரணியாக  உள்ளது.    காணி விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கும் பிணக்குகள்  இறுதியில் கொலை  மற்றும் பாரதூரமான குற்றச் செயல்களுக்கு  கொண்டு செல்லும்.

காணி தொடர்பான பிரச்சினைகளுக்கான வழக்கு விசாரணைகள்  25 தொடக்கம் 30 வருட காலம் வரை  நீண்டு செல்லும் ஒருக்கட்டத்தில் வழக்கு தாக்கல் செய்தவர் நியாயம் கிடைக்காமலே உயிரிழந்து விடுவார். அகவே காணி பிரச்சினைகள் தொடர்பில்   விசாரணைகளை 3 மாத காலத்துக்குள் நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாவட்ட மட்டத்தில் காணி  விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை ஸ்தாபிக்க காணி விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம்  தொடர்பான யோசனை   அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

அரச காணிகளில் சட்டவிரோதமான முறையில் குடியேறியுள்ள பொது மக்களை பிறிதொரு இடத்தில் குடியமர்த்தி    உறுதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். காணி   விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு   உடனடியாக முரண்பாடற்ற தீர்வுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி  தொடர்புடைய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46