எஸ்.பி.பி. அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய பாரதிராஜா தெரிவித்துள்ளது என்ன ?

Published By: Digital Desk 3

25 Sep, 2020 | 01:25 PM
image

பாடசகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு பாரதிராஜா மற்றும் இளையராஜா ஆகியோரும் சென்றுள்ளனர்.

ஆகஸ்ட் 5 ஆம்  திகதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

ஆகஸ்ட் 14-ம் திகதி அவருடைய உடல்நிலை மோசமடைந்தது.

பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிறிது சிறிதாக சகஜ நிலைக்குத் திரும்பினார். இதனிடையே நேற்று (செப்டம்பர் 24) எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

மீண்டும் அவருக்காகப் பிரார்த்திக்குமாறு திரையுலகினர் வேண்டுகோள் விடுத்தனர்.

 இன்று (25.09.2020) காலை அவருடைய குடும்பத்தினர், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். மேலும், மருத்துவமனை இப்போது பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வைத்தியசாலையிலிருந்து திரும்புப்போது இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது:

"சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது. நான் ஒரு எமோஷனலான ஆள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய பாடகன், நல்ல மனிதன், அற்புதமான நண்பன். உலகமெங்கும் மக்கள் பிரார்த்தனை பண்ணினோம். எழுந்து வருவான் என எதிர்பார்த்தோம். ஆனால், பலன் கிடைக்கவில்லை.

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. நம் எல்லாருடைய முடிவும் அதன் கையில் தான் இருக்கிறது.

இந்த உலகில் யாரும் சின்னவனும் இல்லை, பெரியவனும் இல்லை. இன்னும் சின்னதாய் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவனை மாதிரி ஒரு அற்புதமான மனிதனைப் பார்க்க முடியாது. துக்கத்தில் பேட்டியளிக்க முடியாது. வார்த்தைகள் வராது. இந்த துக்கத்தை எந்த விதத்தில் பகிர்ந்துகொள்வது எனத் தெரியவில்லை". 

கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்காமல் போய்விட்டது என இயக்குநர் பாரதிராஜா கண்ணீர் மல்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17