70 இலட்சம் பெறுமதியான கொள்ளையிடப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்பு (வீடியோ இணைப்பு)

Published By: Raam

17 Jul, 2016 | 01:16 PM
image

ரி.விரூஷன்
யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளையிடப்பட்ட சுமார் 70 இலட்சம் பெறுமதியான நகைகளை கைப்பற்றியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்துள்ளதாக யாழ்மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ணவின் வழிநடத்தலில் யாழ் பொலிஸ் நிலைய தலமை பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தலமையில் அமைக்கப்பட்ட விஷேட பொலிஸ் அணியினரே மேற்படி கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த காலங்களில் குற்ற மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து வந்ததின் அடிப்படையில் கடந்த 11ஆம் திகதி சந்தேகத்துக்கு இடமான வகையில் கார் ஒன்றை சோதனையிட்ட போது அவற்றில் கொள்ளையிடப்பட்ட நகைகள் சில மீட்கப்பட்டிருந்தன. இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்திருந்ததுடன் அவரது காரையும் கைப்பற்றியிருந்தனர்.

மேலும் தொடர்ச்சியாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் அடிப்படையில் மேலதிகமாக நகைகள் மீட்கப்பட்டிருந்தன. இவ் நகைகள் கடைகளில் விற்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு வரை சென்று அவற்றை மீட்டிருந்ததாகவும் அவற்றில் பல நகைகள் உருக்கப்பட்ட நிலையில் கட்டிகளாகவும் சில ஆபரணங்களாகவும் மீட்கப்பட்டதாகும் பொலிஸ் அதிகாரி தெரிவித்திருந்தார். அத்துடன் மோசடியான வகையில் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட வங்கி கணக்கு புத்தகங்கள் நான்கையும் கைப்பற்றியுள்ளதாகவும் தொடர்ச்சியான விசாரனையின் மூலம் மேலும் ஒருவரை நேற்றுமுன்தினம் கைது செய்திருந்ததாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.

இவ்வாறு மீட்கப்பட்ட நகைகள் மொத்தம் 128 பவுண்கள் எனவும் அவற்றின் மொத்த பெறுமதி சுமார் 70 இலட்சத்திற்கும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இக் கைது நடவடிக்கையினால் பல கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பான விசாரனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாகவும் கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்டவற்றையும் நீதிமன்றில் முட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ்மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51