345,000 பயன்படுத்திய ஆணுறைகள் மீட்பு : வியட்நாமில் பரபரப்பு

Published By: Vishnu

25 Sep, 2020 | 10:08 AM
image

வியட்நாம் பொலிஸார் சுமார் 345,000 பயன்படுத்திய ஆணுறைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

அவை சுத்தம் செய்யப்பட்டு புதியவையென மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்தவாரம் வியாட்நாம் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேவையொன்று ஒளிபரப்பிய காணொளிக் காட்சிகளில் இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆணுறைகள் தெற்கு மாகாணமான பின் துவாங் நகரில் ஒரு குழியொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய பைகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள பைகள் 360 கிலோகிராம் (794 பவுண்ட் ) எடையுள்ளதாகவும் அவற்றுள் 345,000 அணுறைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணொளிக் காட்சிகளில் வெளிப்படுத்தப்பட்டன.

இது தொடர்பில் கிடங்கின் உரிமையாளர், அடையாளம் தெரியாத நபரிடமிருந்து மாதந்தோறும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளைப் பெற்றதாக கூறியுள்ளார்.

இந் நிலையில் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆணுறைகளில் ஏற்கனவே எத்தனை விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10