சீகிரியாவுக்கு சென்ற 12  வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உட்பட 17 சுற்றுலாப்பயணிகள் குளவித் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

நேற்று (16) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

10 சீனப் பிரஜைகள் 5 உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் ஒரு இந்தியர் மற்றும் ஒரு ஜேர்மன் சுற்றுலாப்பயணி ஆகியோரே  இவ்வாறு குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

குளவிக் கொட்டுக்கு உள்ளாகியவர்களை கிம்பிஸ்ஸ மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை கடந்த வாரத்தில் சீகிரியாவுக்கு சுற்றுலா சென்ற 15 சீனப் பிரஜைகள் உட்பட 20 பேர் குளவிக் கொட்டுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.