ஏழுகன்னியர் மலைக்கு சென்ற 5 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு.!

Published By: Robert

17 Jul, 2016 | 09:53 AM
image

(க.கிஷாந்தன்)

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சப்த கன்னியா என அறியப்படும் ஏழு கன்னியர் மலைக்கு சென்ற நிலையில் காணாமல் போன 5 மாணவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக 5 மாணவர்களும் மலை ஏறச்சென்ற போது, காணாமல் போனதாகவும் அவர்களைத் தேடி பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நேற்றைய தினம் செய்திகள் வெளியாகின.

நேற்று பிற்பகல் 02.00 மணியளவில் ஹட்டன் ரயில் நிலையத்தை வந்தடைந்த இவர்கள் பின்னர் பஸ்ஸில் ஏறி நோட்டன் பிரிட்ஜ் பகுதிக்கு சென்றுள்ளனர். 

இதனையடுத்து, முச்சக்கர வண்டி ஒன்றில் சப்த கன்னியா மலையடிவாரத்துக்கு சென்ற அவர்கள் அங்கு மலையேற முற்பட்டுள்ளனர். 

எனினும் பாதி வழியிலேயே சீரற்ற காலநிலை காரணமாக பாதை தெரியாது பாதிக்கப்பட்ட குறித்த மாணவர்கள், பின்னர் இரவானதும், தாம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை அறிந்து, தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறிவித்துள்ளனர்.

வழித்தவறிய மாணவர்களில் ஒருவரின் தொலைபேசியிலிருந்து கிடைத்த குறுஞ்செய்தியை வைத்துக்கொண்டே அவர்களை தேடும் நடவடிக்கைகளில், படையினர் ஈடுப்பட்டதாக அறியமுடிகின்றது.

இதில் 4 பேர் களனி பல்கலைக்கழக மாணவர்கள் என்றும், மற்றையவர் கொத்தலாவல பாதுகாப்பு அறிவியல் பிரிவு மாணவன் என்றும் அறியமுடிகின்றது.

எது எவ்வாறு இருப்பினும் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50