இலங்கை கிரிக்கெட்டின் முறையான ஆடைக்கான அனுசரணையாளராக நாமல் பாலச்சந்த்ர

Published By: Vishnu

23 Sep, 2020 | 05:47 PM
image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ முறைமையான ஆடை  அனுசரணையாளருக்கான ஒப்பந்தம் ஒன்றில், நாட்டின் மிகவும் பிரபல்யம்பெற்ற ஆடை உற்பத்தி  நிறுவனமான நாமல் பாலச்சந்த்ர பிறைவேட் லிமிட்டெட் கைச்சாத்திட்டுள்ளது. 

இதற்கு அமைய அடுத்த மூன்று  வருடங்களுக்கு தேசிய அணிகளுக்கான உத்தியோகபூர்வ முறைமையான ஆடை  அனுசரணையாளராக நாமல் பாலச்சந்த்ர பிறைவேட் லிமிட்டெட் செயற்படும்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று செய்துகொள்ளப்பட்ட இந்த அனுசரணைக்கான ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் சார்பாக  செயலாளர் மொஹான் டி சில்வாவும் நாமல் பாலச்சந்த ர பிறைவேட் லிமிட்டெட் சார்பாக அதன்  தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான நாமல் பாலச்சந்தரவும கைச்சாத்திட்டு, ஒப்பந்தத்தைப்  பரிமாற்றிக்கொண்டனர். 

இரண்டு தரப்பினருக்கும் இடையில் கைச்சாத திடப்பட்ட இந்த ஒப்பந்தத்துக்கு அமைய, இலங்கை மகளிர்  மற்றும் ஆடவர் தேசிய கிரிக்கெட் அணிகளுக்குரிய முறைமையான ஆடைகளை, ஆடை உற்பத்தியிலும்  ஆடை வடிவமைப்பிலும் புகழ்பெற்ற நாமல் பாலச்சந்தர பிறைவேட் லிமிட்டெட் வழங்கும். 

அத்துடன் வீர,  வீராங்கனைகளுக்கான ஜெக்கெட், மேற்சட்டை, நீள கால்சட்டை உட்பட ஏனைய சலுகைகளுக்கு  தேவையான நிதியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு நாமல் பாலச்சந்த்ர பிறைவேட் லிமிட்டெட்  வழங்கும். 

அனுசரணைக்கான இந்த ஒப்பந்தம் பரிமாற்றிக்கொள்ளப்பட்டபோது கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா  கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா, 

'விளையாட்டுத்துறையில்  மட்டுமல்லாமல் முழு உலகிலும் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான வேளையில், எமது  உத்தியோகபூர்வ முறைமையான ஆடை அனுசரணையாளராக நாமல் பாலச்சந்தர பிறைவேட் லிமிட்டெட்  எம்மோடு கைகோர்த்துள்ளதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம் என்றார். 

இலங்கை கிரிக்கெட் தொடர்ந்தும் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு பெறுநிறுவனத்துறையின்  அர்ப்பணிப்புத்தன்மையை இந்த அனுசரணை எடுத்துக்காட்டுவதால் அதனை பெறுமதிமிக்க ஒன்றாக  நாங்கள் மதிக்கின்றோம் எனவும் மொஹான் டி சில்வா குறிப்பிட்டார். 

இந்த ஒப்பந்தத்தின்கீழ் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிகளின் உத்தியோகபூர்வ முறைமையான  ஆடை அனுசரணையாளர் என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கான உரிமை நாமல் பாலச்சந்த்ர  பிறைவேட் லிமிட்டெடுக்கு உரித்தாகின்றது. 

அத்துடன் அனுசரணைக்கான காலப்பகுதியில் அது  தொடர்பான சகலவிதமான காகிதாதிகள், பிரசாரப் பொருட்கள், விளம்பரங்கள் அனைத்திலும் அதனைப்  பயன்படுத்தம் உரிமையும் அந்த நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. 

முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கும் இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையுடன் பங்களார்களாக  இணைவதையிட்டு நாங்கள் பெருமை அடைகின்றோம். எமது வர்த்தக குறியீட்டுப் பெயரின் மதிப்பை  மேலும் அதிகரிக்கச் செய்வதற்கு இந்த அனுசரணை நிச்சயமாக பங்களிப்புச் செய்யும் என்பதை நாங்கள்  அறிவோம் என இந்த அனுசரணை தொடர்பாக கருத்து வெளியிடுகையில் நாமல் பாலச்சந்த்ர பிறைவேட்  லிமிட்டெடின் தலைவர் நாமல் பாலச்சந்த்ர குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31