அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான ஆரம்பமே 20 வது : ஐக்கிய மக்கள் சக்தி

Published By: R. Kalaichelvan

23 Sep, 2020 | 04:28 PM
image

(செ.தேன்மொழி)

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம்தான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான ஆரம்பம். இந்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒன்றே போதுமானது அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இதேவேளை மன்னராட்சி காலத்தில் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளும் மோகத்தில் எவ்வாறு செயற்பட்டார்களோ  அவ்வாறே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் தனது மூத்த சகோதரனின் அதிகாரங்களை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றார் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான துஷார இந்துனில் மற்றும் மனோகணேசன் ஆகியோர் கருத்துறைக்கும் போதே இவ்வாறு கூறினர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கூறியதாவது,

பௌத்த மதத்தை போசிப்பதாக கூறிக் கொண்டு ஆட்சியை கைப்பற்றியுள்ள ஆளும் தரப்பினர். பௌத்த மதம் கூறும் போதனைகளையும் மதிக்காமலே செயற்பட்டு வருகின்றனர்.

ஒருவருக்குறிய அதிகாரங்களை பறித்தெடுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மத போதனை கருத்துகளில் கூறப்பட்டுள்ள போதிலும் , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதனையே செய்து வருகின்றார்.

ஜனாதிபதி இவருடைய மூத்த சகோதருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மட்டுமன்றி பாராளுமன்றம் , சட்டத்துறை மற்றும் நாட்டு மக்களின் அதிகாரங்களையே பறித்துக் கொள்ள முயற்சித்துவருகின்றார்.

மன்னராட்சி காலங்களில் அரசாட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் சிரல் தனது தந்தை , மூத்த சகோதரன் , இளைய சகோதரன் போன்ற தனது உறவினர்களையே கொலைச் செய்துள்ளதாக அறிந்துக் கொண்டுள்ளோம். தற்போது நவீனமயமானதால் அதே முறை அரசியலமைப்பு திருத்தம் ஊடாக கொண்டுவரப்படுகின்றது. ஜனாதிபதி அவரது மூத்த சகோதரனின் அதிகாரங்களை பறித்துக் கொள்வதற்காகவே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தையே முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் மட்டு மன்றி நாடளாவிய ரீதியில் தெளிவுப்படுத்துவதுடன் , அதற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுப்போம். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இல்லாதொழிக்க முடியாவிட்டாலும் , அதில் காணப்படும் சிக்கலான ஏற்பாடுகளை மாற்றியமைப்பதற்காவது எமது போராட்டங்களால் முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஆனால், இந்த திருத்தத்திற்கு எமது கட்சியின் உறுப்பினர்கள் ஒருவரும் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதையும் உறுதியாக கூறமுடியும்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கூறியதாவது,

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவே நாட்டின் தலைவர், அவரது மூத்த சகோதரன் பிரதமராகவும் , இன்னுமொரு சகோதரர் பொருளாதார செயலணியின் தலைவராகவும் , ஏனைய உறவினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜனாதிபதியின் கையை பலப்படுத்துவதற்காக என்று குறிப்பட்டு அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தை கொண்டுவருவதற்கு முயற்சித்து வருகின்றனர். இதற்கான அவசியம் என்ன?

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்தான் அரசாங்கத்தின் வீழ்சிக்கும் வழிவகுக்கப் போகின்றது. இந்த திருத்தமே போதும் இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக.

கடந்த அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முரண்பட்டுக் கொண்டார்கள் என்பதன் காரணமாகவே தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் பலத்தை பெற்றுக் கொடுத்தார்கள். ஆனால் இந்த அரசாங்கத்திற்குள் இன்னுமொரு அரசாங்கம் அமைந்துள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வியத்மக குழுவினரே ஜனாதிபதிக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09