தஸ்மேனியாவில் கரையொதுங்கிய 380 பைலட் திமிங்கலங்கள் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

23 Sep, 2020 | 05:03 PM
image

தஸ்மேனியா தீவில் சுமார் 380 திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளது. இது அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய இழப்பு என கருதப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முதல், தஸ்மேனியா தீவின் மேற்கு கடற்கரையில் நூற்றுக்கணக்கான பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கின.

இன்று புதன்கிழமை மீட்புப் படையினரால் 50 திமிங்கிலங்கள் மீட்கப்பட்டது. மீதமுள்ள 30 திமிங்கலங்களுக்கு உதவ அதிகாரிகள் முயன்றனர்.

" திமிங்கலங்கள் உயிருடன் இருக்கும் வரை" மீட்பு பணிகள் தொடரும் என்று தஸ்மேனிய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

திமிங்கிலங்கள் கரையொதுங்கியமைக்கு காரணம் முழுமையாகப் தெரியவில்லை  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 க்குப் பிறகு முதல் தடவையாக தஸ்மேனியாவில் 50 க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் ஒன்றாக கரையொதுங்கி சிக்கித் தவிக்கின்றன.

1996 ஆம் ஆண்டில், மேற்கு அவுஸ்திரேலியாவில் 320 பைலட் திமிங்கிலங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியது, அதே இனத்தைச் சேர்ந்த 600 திமிங்கிலங்கள் 2017 இல் நியூசிலாந்தின் தென் தீவில் கரையொதுங்கின.

திமிங்கலங்கள் பெரும்பாலும் மேக்வாரி ஹெட்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியைச் சுற்றியுள்ள நீரில் கரையொதுங்குகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17