மாமியாரே காரணம் : மண்ணெண்ணெய் போத்தலுடன் மருமகள் போராட்டம் !

23 Sep, 2020 | 01:54 PM
image

தனது மாமியாரால் வழங்கப்பட்ட காணியினை மீண்டும் அவர் உரிமைகோருவதாகவும் எனவே அந்த காணியினை மீட்டுத்தருமாறு கோரி பெண் ஒருவர் வவுனியா பிரதேச செயலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

குறித்த பெண் கருத்து தெரிவித்த போது...

தனது கணவனின் தாயாரால் வவுனியா கோவில்குளத்தில் நான்குபரப்பு காணி கடந்த 2006 ஆம்ஆண்டு  எழுத்துமூலமாக வழங்கப்பட்டது. தற்போது தனது கணவன் இறந்தநிலையில்  அந்த காணியினை மீண்டும் அவர் உரிமைகோருவதுடன் 2010 ஆம் ஆண்டு பொலிசாரின் பாதுகாப்புடன் வீட்டினையும் அமைத்துள்ளார். எனவே கணவன் இறந்தநிலையில் தனக்கு கிடைக்கவேண்டிய காணியினை பெற்றுத்தருமாறு அவர் கோரிக்கை முன்வைத்ததுடன், தீக்குளிக்கபோவதாகவும் தெரிவித்தார்.

இதன்போது பதாதை ஒன்றை எந்தியபடி போராட்டத்தில் குதித்தள்ள குறித்த பெண் மண்எண்ணை போத்தில் ஒன்றினையும் உடன் வைத்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அவருடன் கலந்துரையாடலை ஏற்படுத்தியதுடன்,அவர் வைத்திருந்த மண் எண்ணை போத்திலை மீட்டு அவரை, பிரதேச செயலாளரிடம் அழைத்துச்சென்றனர்.

குறித்த காணி 1981 ஆம்ஆண்டிலேயே அவரது மாமியாரின் பெயரில் பதியப்பட்டிருப்பதாக பிரதேசசெயலாளர் இதன்போது தெரிவித்தார். 

இது தொடர்பாக சம்பந்தபட்ட மற்றயதரப்புடனும் கலந்துரையாடி இதற்கான தீர்வினை பரிசீலிக்கலாம் என அப்பெண்ணிடம் பொலிசாரும் உறுதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59