நாடு தழுவிய ரீதியில்  24 இலட்சம்  வீட்டுத்தோட்ட  பயிர்செய்கை :பசில் ராஜபக்ஷ

Published By: R. Kalaichelvan

23 Sep, 2020 | 01:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய  வீட்டுத்தோட்ட செயற்திட்டத்தின் கீழ்  நாடு தழுவிய ரீதியில் 24 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அமைக்கும் நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு  பொருளாதார புத்தாக்கம் , வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர்  பசில் ராஜபக்ஷ  தெரிவித்தார்.

விவசாயத்திணைக்கள  அதிகாரிகள், அரச அதிகாரிகளுடன் இன்று அலரி மாளிகையில் இடம் பெற்ற சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய  உற்பத்திகளை துரிதமாக ஊக்குவிப்பது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். செயற்திறன் மிக்க பிரஜைகள் - மகிழ்ச்சியான  குடும்பம்   என்ற செயற்திட்டம்  முறையாக  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மரக்கறி மற்றும் பழங்கள், தானிய உற்பத்திகளை ஒவ்வொரு குடும்பமும் சுயமாக  உற்பத்தி செய்துக் கொண்டால் உணவு பற்றாக்குறை, உணவு இறக்குமதி ஆகியவற்றுக்கான தேவை தோற்றம் பெறாது.

 பெருந்தெருக்கல் அபிவிருத்தி செய்யப்படும் வேலையில் விவசாயத்துறைக்கும் முன்னுரிமை வழங்கப்படும். விவசாய  உற்பத்தியில் நாடு தன்னிறைவு  அடைய வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் விவசாய அமைச்சு, விவசாய திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக  நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்.  

 24 இலட்சம்   வீட்டுத்தோட்டம் அமைத்தல் திட்டம்  வலய , மவாவட்ட மற்றும் மாகாண அடிப்படையில் செயற்படும் விவசாயத்துறை தாபனங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும்.  

பழங்கள், மரகறி, மற்றும் தானிய  உற்பத்தி ஆகியவற்றை   உற்பததி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்படும். சுற்றாடல் துறையின்  பாதுகாப்பு  குறித்து அரசாங்கம்  கவனம் செலுத்தும். டெங்கு பரவாத வகையில் சுற்றாடல்  பாதுகாப்பு சார் நடவடிக்கைகள் துரிதமான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33