முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் ஊடக அறிக்கை ஆணைக்குழுவை அவமதிக்கிறதாம் :  சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி, பிரதமருக்கு அறிவிப்பு

Published By: R. Kalaichelvan

23 Sep, 2020 | 12:02 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ அலித்த சாட்சியங்களை மையப்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை, ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவை அவமதிப்பதாகவே தாம் கருதுவதாக, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன தெரிவித்தார்.

குறித்த ஊடக அறிக்கை தொடர்பில் தமது நிலைப்பாட்டை இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்த சாட்சியத்தை  நிராகரித்து மைத்திரிபால சிறிசேன  கடந்த ஞாயிறன்று அறிக்கையொன்றை வெளிட்டிருந்தார்.

அந்த அறிக்கை மூலம் தமது சேவைபெறுநர் அச்சமடைந்துள்ளதாக, ஹேமசிறி பெர்னாண்டோவின் சட்டத்தரணி டில்ஷான் ஜயசூரிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

ஆணைக்குழுவில் சாட்சியாளரிடம் குறுக்குக் கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பத்தைக் கோராமல், அறிக்கை மூலம் குற்றச்சாட்டை நிராகரிப்பது ஆணைக்குழுவின் அதிகாரத்தைப் பொருட்படுத்தாத நிலைமையாகும் என,  சட்டத்தரணி டில்ஷான் ஜயசூரிய கூறினார்.

அறிக்கையை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளரை ஆணைக்குழுவிற்கு அழைத்து நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபடவில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்கான காரணத்தை வினவுமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

இந் நிலையில் நேற்று , ஆணைக் குழுவின் கேள்விக்கு பதிலளித்து, அந்த அறிக்கை தொடர்பில் தாம் அறியவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சரித் குணரத்ன தெரிவித்திருந்தார்.

தமது சேவை பெறுநரால் அது குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஆணைக்குழுவில்  இன்றைய  தினம் விடயங்களை தெளிவுபடுத்துமாறு, முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிக்கு ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தது.

 அதன்படி இன்று ஜனாதிபதி சட்டத்தரணி மைதிரி குணரத்ன,  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆணைக் குழுவில் ஆஜரானார்.  

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஆணைக் குழுவுக்கு சமூகமளித்தமை விஷேட அம்சமாகும். முற்பகல் 9.30 மணியளவில் அவர் இவ்வாறு ஆணைக் குழுவுக்கு சமூகமளித்ததுடன், அங்கிருந்து நண்பகல் 12.10 மணியளவில் ஆணைக் குழுவின் நடவடிக்கைகளை கண்காணித்துவிட்டு வெளியேறிச் சென்றிருந்தார்.

 எனினும்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, ' தனது சேவை பெறுநர் சார்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையானது,  பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவின் சாட்சியத்தை மையப்படுத்தி பேராயர் சபை விடுத்த ஊடக அறிக்கைக்கு சமமானது என தெரிவித்தார்.

 இதன்போது  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெர்ணான்டோ, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின்  குறித்த கூற்றை நிராகரித்தார்.

பேராயர் சபை வெலியிட்ட ஊடக அறிக்கையும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சார்பில் அவரது தனிப்பட்ட செயலாளர் வெளியிட்ட ஊடக அறிக்கையும் ஒரு போதும்  சமமாக மாட்டாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் குறித்த ஊடக அறிக்கை தொடர்பில் ஆணைக் குழு சட்டத்தின் 16 ஆம் அத்தியாயத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவின் சட்டத்தரணி டில்ஷான் ஜயசூரிய கோரினார்.

 இந் நிலையில் சட்ட மா அதிபர் திணைக்கள மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் நிலைப்பாட்டையும் அறிந்துகொண்ட ஆணைக் குழு அது தொடர்பிலான தீர்மானத்தை இன்று அறிவிப்பதாக தெரிவித்தது.

இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதியும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதியும் சாட்சியமளிக்க ஜனடஹிபதி விசாரணை ஆணைக் குழுவில் ஆஜராக  அறிவித்தல் அனுப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37