ராஜஸ்தானிடம் மண்டியிட்டது சென்னை

Published By: Priyatharshan

23 Sep, 2020 | 06:36 AM
image

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சனின் அதிரடியான துடுப்பாட்டத்தினால் ராஜஸ்தான் அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் நான்காவது போட்டி செப்டெம்பர் 22 ஆம் திகதி சார்ஸாவில் இடம்பெற்றது.

இதில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின.

சார்ஜாவில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ராஜஸ்தான் அணியின் முதல் விக்கெட் 11 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆறு ஓட்டத்துடன் தீபக் சஹாரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

2 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகமாக உயர்வடைந்தது.

இவர்கள் இருவரும் அதிரடிகாட்ட ராஜஸ்தான் அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 129 ஓட்டங்களை குவித்தது.

இந் நிலையில் சஞ்சு சம்சன் 11.4 ஆவது ஓவரில் 9 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கலாக மொத்தமாக 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த டேவிட் மில்லரும் அதே ஓவரின் இறுதிப் பந்தில் எதுவித ஓட்டமின்றி ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களறிங்கிய வீரர்களுடன் தொடர்ந்தும் அதிரடி காட்டி வந்த ஸ்மித் 18.2 ஆவது ஓவரில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களை குவித்தது.

ராஜஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சஞ்சு சாம்சன் 74 ஓட்டங்களையும் ஸ்மித் 69 ஓட்டங்களையும் ஆர்ச்சர் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டுக்களையும், தீபக் சாஹர், லுங்கி நிகிடி மற்றும் சாவ்லா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், 217 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி இறுதிவரை போராடியது. இறுதிவரை போராடினாலும் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்று இறுதியில் ராஜஸ்தானிடம் 16 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

சென்னை அணி சார்பாக டுபிளஸிஸ் 72 ஓட்டங்களையும் வொட்சன் 33 ஓட்டங்களையும் டோனி 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி சார்பாக ராகுல்திவட்டிய 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியில் சென்னை அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்திய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 2 புள்ளிகளைப் பெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியில் 23 ஆம் திகதி இடம்பெறும் 13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 5 போட்டியில் கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41