பிரான்ஸில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை அந்நாட்டின் தேசிய சுதந்திர தினமான பாஸ்டில் தினக் கொண்டாட்ட நிகழ்வின் போது கூடியிருந்த கூட்டத்தினரின் மீது டிரக் வண்டியை மோதி நடத்தப்பட்ட தாக்குதலிற்கு ஜ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

குறித்த தாக்குதலில் குறைந்தது 84 பேர் பலியாகியுள்ளதுடன் 100 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.