குட்டை ஆடை அணியும் பெண்களுக்கு எதிராக கம்போடியாவில் புதிய சட்டம்!

Published By: Jayanthy

22 Sep, 2020 | 04:15 PM
image

கம்போடியாவில் சமீபகாலமாக பெண்கள் சரிவர ஆடைகளை அணிவதில்லை என்ற குற்றச்சாட்டில் பெண்களுக்கு எதிராக கம்போடிய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக உடல் அங்கங்கள் தெரியும் வகையில் ஆடை அணியும் பெண்களுக்கு எதிராக சட்டமொன்றை அமல் படுத்த கம்போடியா அரசாங்கம் நடவடிக்கை யெடுத்துவருகின்றது.

கம்போடிய மாடல்கள்

கடந்த ஏப்ரல் மாதம், சமூக ஊடகங்களில் ஆடை விளம்பங்களை மேற்கொண்ட பெண்ணொருவர் மீது ஆபாசம் மற்றும் அநாகரீகமான வெளிப்பாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு ஆறு மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தின் போது,  கருத்து தெரிவித்திருந்த கம்போடியாவின் பிரதமர் ஹன் சென், "இது நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மீறும் செயல். இதுபோன்ற நடத்தைகளே பாலியல் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காரணமாகின்றன" என்று கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, பெண்களின் ஆடை தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள சட்டம் கம்போடியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கம்போடிய பெண்கள் பலர் நீச்சல் உடை மற்றும் குட்டை பாவாடையுடன்  படமெடுத்து #mybodymychoice என்ற ஹேஷ்டேக்கில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 இந்த சட்டத்துக்கு கம்போடியாவின்  மத்திய அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருமென்று கூறப்படுகிறது.

BBC

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52