கேகாலை - கலிகமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  7 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுபாட்டை இழந்து ஓடையொன்றில் வீழ்ந்ததில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த 8 பேரை கேகாலை வைத்தியசாலையில் அனுமதித்த  நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி - அக்குரணை, வராகஸ்ஹின்ன  பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.