அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் பிரகடனம்

Published By: Raam

16 Jul, 2016 | 01:59 PM
image

அமெரிக்க ஜனாதிபதியாக தான் தெரிவானால் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரைப் பிரகடனப்படுத்தப் போவதாக அமெரிக்க குடியரசுக் கட்சியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை இரவு சூளுரைத்துள்ளார்.

பிரான்ஸின் நீஸ் நகரில் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற பாரிய தாக்குதலையடுத்து 'பொக்ஸ் நியூஸ்'ஊடகத்துக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது அறியப்படாத நிலையிலேயே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் ஐ.எஸ். தீவிரவாதிகளே அந்தத் தாக்குதலை நடத்தினார்கள் எனக் கூறுகின்றன.

டொனால்ட் டிரம்ப் அந்தத் தாக்குதலுக்கு சில மணித்தியாலங்களில் டுவிட்டர் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்த செய்தியில், " இது இன்னொரு மோசமான தாக்குதல். இந்தத் தடவை பிரான்ஸில் நீஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. பலர் இறந்தும் காயமடைந்தும் உள்ளார்கள். நாம் எப்போது பாடம் படிக்கப் போகிறோம்?” எனக் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியாக தான் தெரிவானால், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரொன்றைப் பிரகடனப்படுத்த பாராளுமன்றத்தைக் கேட்டுக் கொள்ளப் போவதாகத் அவர் தெரிவித்தார்.

“ஐ.எஸ். தீவிரவாதிகளை புற்றுநோயொன்றாக குறிப்பிட்ட டொனால்ட் டிரம்ப், அவர்களுக்கு எதிரான போரை நேட்டோ குறிக்கோள் ஒன்றுடன் மேற்கொள்ள வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

அதேசமயம் டொனால்ட் பிறிதொரு நேர்காணல் நிகழ்ச்சியில், மேற்படி தீவிரவாதப் பிரச்சினை அடிப்படைவாத இஸ்லாத்தால் ஏற்பட்டது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவார் என தெரிவித்துள்ளார்.

“இது 'அடிப்படை இஸ்லாம்' என்ற வார்த்தைப் பிரயோகத்தை பராக் ஒபாமா பயன்படுத்த வேண்டிய தருணமாகும்" என அவர் கூறினார்.

இதன்போது அவர் அமெரிக்கா தனது எல்லைகளை வலுப்படுத்தவும் முஸ்லிம்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கவும் மீள அழைப்பு விடுத்தார்.

“ இதற்கு முன் பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது நாம் என்ன செய்தோம்? நாம் மிகவும் இளகியவர்களாக நடந்து கொள்ள முயற்சித்தோம். மிகவும் சிவில் முறையில் நாங்கள் அதை அணுகினோம். நாங்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறோம். உலகமானது பலமடைந்து வருகிறது. நாம் எமது எல்லைகளை மிகவும் இறுக்கப்படுத்த வேண்டியுள்ளது" எனத் தெரிவித்த டொனால்ட் டிரம்ப், ''நாம் சட்டம், நீதிக்கு மதிப்பற்ற முற்றிலும் வேறுபட்ட உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அங்கு எதற்கும் எவருக்கும் மதிப்பில்லை. இதனை நாம் மிகவும் மோசமான முறையில் முரட்டுத்தனமாக கையாள வேண்டியுள்ளது. நாம் அவ்வாறு செய்யாவிட்டால் எமக்கு ஒரு சமூகமோ அல்லது உலகமோ இருக்காது" என்று கூறினார்.

“பராக் ஒபாமா இங்கு பெருமளவு மக்கள் வருவதற்கு அனுமதியளித்துள்ளார். ஆனால் அவர்கள் யார் என்பதோ அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதோ தெரியாதுள்ளது. அவர்கள் சிரியாவில் இருந்தும் வந்திருக்கலாம். ஆனால் அதை நிரூபிப்பதற்கு ஆவணங்கள் இல்லை. அதனால் நான் ஜனாதிபதியானால் தீவிரவாதிகளின் பிரதேசங்களிலிருந்து மக்கள் வருவதை அனுமதிக்கமாட்டேன். நான் அவர்களின் பின்னணி குறித்து தீவிர பரிசீலனையை மேற்கொள்வேன்" என டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52