அஞ்சலி....

21 Sep, 2020 | 11:20 AM
image

தமிழ் மக்களின் ஈடேற்றம் தொடர்பில் சில கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்த தியாகி திலீபன், 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி உயிரிழந்தார்.

அவரது வருடாந்த நினைவேந்தல் ஆண்டுதோறும் தமிழ் மக்களால் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் அண்மைய தினங்களில் வடக்கு, கிழக்கில் தியாகி திலீபனின் இந்த நிகழ்வை அனுஷ்டிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. 

வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் விண்ணப்பங்களை செய்து நினைவேந்தலை மேற்கொள்ள முடியாதவாறு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. 

 இந்நிலையில் ஐ.நா. சாசனத்தின் பிரகாரமும் சர்வதேச சமவாயங்களின் பிரகாரமும் தனியாகவோ குழுவாகவோ உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த நினைவுகூர மக்கள் உரித்துடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூறுகின்றனர்.

மேலும் தியாகி திலீபனின் 33 ஆவது நினைவேந்தல் நிகழ்வை நடத்த வழிவிடக்கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதங்களையும் தமிழ் தலைவர்கள்  ஒன்றிணைந்து அனுப்பி வைத்துள்ளனர்.  

அத்துடன் குறித்த கடிதம் தொடர்பில் ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் எவ்வித பிரதிபலிப்பு களையும் காட்டாதபட்சத்தில்  புதன்கிழமை மீண்டும் கூடி ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் தமிழ் தலைவர்கள்  ஆராய்ந்து வருகின்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள்  இவ்விடயம் தொடர்பில் பேச்சு நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தமிழர்களின் நினைவேந்தலை மீள வழங்காத பட்சத்தில் எதிர்வரும் வாரங்களில்  வடக்கு, கிழக்கை முடக்குவதற்கு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது .

தியாகி திலீபன் விடயத்தில் போன்று  தமிழ் தலைவர்கள் தங்கள் ஏற்றத்தாழ்வுகளை கைவிட்டு உண்மையான தியாக சிந்தனையுடன் தொடர்ந்து ஒற்றுமையாக செயல்படுவார்களா? என்ற ஏக்கம் தமிழ் மக்களை சூழ்ந்துள்ளது . 

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று கூறுவார்கள் அந்தவகையில் தமிழ் தலைவர்களின் ஒற்றுமையிலும் பலத்திலுமே அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தங்கியுள்ளது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49