குழந்தைப்பேறின்மையால் 48 மில்லியன் தம்பதியினர் பாதிப்பு

Published By: Digital Desk 3

21 Sep, 2020 | 12:10 PM
image

கருவுறாமை அல்லது மலட்டுத்தன்மை என்பது உலகளாவிய சுகாதார பிரச்சினையாகும், இது உலகளவில் இனப்பெருக்க வயதுடைய மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது.

இந்நிலையில், உலகளாவிய ரீதியில் 48 மில்லியன் தம்பதிகளும் 186 மில்லியன் தனிநபர்களும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக  உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கருவுறாமை என்பது ஆண் அல்லது பெண் இனப்பெருக்க அமைப்பில் உருவாகும் ஒரு நோயாகும், இது 12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தில் இடம்பெறும் வழக்கமான உடலுறவுக்குப் பிறகும் கர்ப்பம் அடையத் தவறுவதை குறிக்கின்றது.

முதன்மை கருவுறாமை என்பது ஒருமுறையேனும் கர்ப்பமடைய இயலாமையாகும். இரண்டாம் நிலை கருவுறாமை என்பது முன்னர் வெற்றிகரமாக கருத்தரித்த பிறகு கர்ப்பம் பெற இயலாமை.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச நோய்களின் வகைப்பாடு பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரிடமும் கருவுறாமைக்கான பல முதன்மை மற்றும் இரண்டாம் நிலை காரணங்கள் குறித்த கூடுதல் தகவல்களை வழங்குகிறது.

ஆணின் காரணிகள், பெண்ணின் காரணிகள், ஆண் மற்றும் பெண் காரணிகளின் கலவையால் அல்லது விவரிக்கப்படாமல் இருக்கும் காரணிகளால் கருவுறாமை/மலட்டுத்தன்மை  ஏற்படலாம். 

இருப்பினும், புகைப்பிடித்தல், அதிகப்படியான மதுபாவனை, உடல் பருமன் அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதல்களின் வெளிப்பாடு போன்ற சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் குறைந்த கருவுறுதல் விகிதங்கள் காரணமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04