நல்லிணக்கப்பொறிமுறையை ஏற்கமாட்டோம் - ஜெனீவாவில் அறிவித்தது இலங்கை

20 Sep, 2020 | 01:51 PM
image

(செய்திப்பிரிவு)

வெளியகத் தரப்பினரால் இயக்கப்படும் ஒரு நல்லிணக்கப்பொறிமுறைக்கு ஒருபோதும் உடன்பட முடியாது என்று ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அறிவித்திருக்கிறது.

சுமார் நான்கரை வருடங்களுக்கும் அதிகமான காலமாக உண்மையான நல்லிணக்கத்தை வழங்குவதற்குத் தவறிய - வெளியகத்தரப்பினரால் இயக்கப்படும் ஒரு கட்டமைப்பைத் தொடர்வதிலும் பார்க்க, நாட்டுமக்கள் வழங்கிய ஆணையின் ஆதரவுடன் அவர்களின் நலனை முன்நிறுத்திய வகையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45 வது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதம் ஆகிய விடயங்கள் பற்றிய ஐ.நா விசேட அறிக்கையாளருடனான கலந்துரையாடலின் போதே இலங்கையின் பிரதிநிதிகள் மேற்கண்ட நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அத்தோடு 2030 ஆம் ஆண்டுக்கான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதுடன் உரிமைகள், நீதி, நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு செயற்பட்டு வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

மேலும் ஐ.நா விசேட அறிக்கையாளரின் அறிக்கையைப் பொறுத்தவரையில், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதிலிருந்து உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அடையப்பட்ட நேர்மறையான முன்னேற்றங்கள் அதில் சுட்டிக்காட்டப்படவில்லை என்றும் இலங்கையின் பிரதிநிதிகள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57