டுபாயில் மணிக்கு 8,000 பேர் பயணிக்கும் பாதசாரிகளுக்கான மேம்பாலம் திறந்து வைப்பு!

Published By: Jayanthy

19 Sep, 2020 | 04:24 PM
image

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மணிக்கு 8,000 பேர் பயணிக்க கூடிய பாதசாரிகளுக்கான மேம்பாலத்தை  அந்நாட்டில் முதன்முதலில்  அமைத்துள்ளது. 

New footbridge in Dubai Marina

டுபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (சனிக்கிழமை) இன்று தனித்துவமான நான்கு திசை  கொண்ட பாதசாரிகளுக்கான மேம்பாலத்தை   திறந்தது வைத்துள்ளது.

துபாய் மெரினாவின் நுழைவாயிலில் அல் கர்பி வீதியுடன் கிங் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் தெருவின் சந்திப்பில் அமைந்துள்ள இந்த பாலத்தில் சந்தியின் நான்கு பக்கங்களையும் இணைக்கும் நான்கு எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

75 மீட்டர் நீளம் கொண்ட  இந்த பாலத்தில் அனைத்து திசைகளிலும் மணிக்கு 8,000 பேர் பயணிக்க முடியும் என டுபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. 

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right