சீன மக்களின் முக்கிய ஆதாரம் கம்யூனிஸ்ட் கட்சியே என்பதை நிரூபித்திருக்கும் நெருக்கடி சூழ்நிலைகள்

19 Sep, 2020 | 02:40 PM
image

* சிறப்பான வாழ்க்கையை நோக்கிய சீன மக்களின் பயணத்தை எந்தவொரு தனிநபரோ அல்லது சக்தியோ தடுத்துவிட முடியாது என்பதை கொவிட்-19க்கு எதிரான வெற்றிகரமான போராட்டம் வெளிப்படுத்தியிருப்பதாக பிரகடனம் செய்கிறார் சீன ஜனாதிபதி.

பெய்ஜிங், (சின்ஹ_வா) சீன மக்களின் முதுகெலும்பு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பலம் வாய்ந்த தலைமைத்துவமே என்று கூறியிருக்கும் ஜனாதிபதி சி ஜின்பிங், இது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சீனர்கள் வெற்றிக்கொள்ள கடைபிடித்த அணுகுமுறைகளை போன்று நெருக்கடி காலங்களில் தெளிவாக தெரிகிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். 

கொவிட்-19 தொற்றுநோய்க்கெதிரான சீனாவின் போராட்டத்தில் முன்மாதிரியாக செயற்பட்டவர்களை பாராட்டுவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி கடந்தவாரம் ஏற்பாடு செய்த கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, கொரோனா வைரஸை சீனா எதிர்கொண்ட விதம் சீன தேசத்தினதும் சீன மக்களினதும் மிகப்பெரிய பலத்தை உலகுக்கு வெளிக்காட்டியிருக்கிறது என்றும் சீன நாகரிகத்தின் தடங்காணாத ஆழத்தை கொண்ட மரபுரிமையையும் பொறுப்பு வாய்ந்த பிரதானமான நாடு என்ற வகையில் சீன தேசத்துக்கு இருக்கும் பொறுப்புணர்வையும் இது வெளிக்காட்டியிருக்கிறது என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

வைரஸூக்கு எதிரான போராட்டத்தின் உணர்வை நவீன சோசலிஷ நாடொன்றை கட்டியெழுப்பி தேசிய புத்திளமையாக்கத்தை சாதிப்பதற்கான பிரமாண்டமான பலமாக மாற்றியமைக்குமாறும் சி ஜின்பிங் சீன மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தக் கூட்டம் பிரதமர் லீ கெகியாங் தலைமையில் நடைபெற்றது. இதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஏனைய சிரேஷ்ட தலைவர்கள் பலரும் பங்குபற்றினர்.

பாரம்பரிய சீன மருத்துவத்தை பயன்படுத்துதல்

இந்தக் கூட்டத்தில் கௌரவிக்கப்பட்டவர்களில் ஒருவர் சீன பாரம்பரிய மருத்துவ நிபுணரான ஷாங் போலீ. அவர் சீன பாரம்பரிய மருத்துவத்தையும் மேற்கத்தேய மருத்துவத்தையும் கலந்து கொவிட்-19க்கு சிகிச்சையளிப்பதற்கான ஆராய்ச்சி திட்டம் ஒன்றுக்கு தலைமை வகித்தார். கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னுதாரணமான பங்கை வகித்தமைக்காக மொத்தமாக 1499 நபர்களும் 500 குழுக்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 186 உறுப்பினர்களும் 150 கட்சியின் ஆரம்பநிலை அமைப்புகளும் பாராட்டப்பட்டன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வேறு 14 உறுப்பினர்கள் மரணத்துக்கு பின்னர் கௌரவிக்கப்பட்டனர்.

கொவிட்-19 தொற்றுநோய் பிரத்தியேகமான ஒன்று. அதன் விளைவான பிரத்தியேகமான நெருக்கடியை கையாள்வதற்கு பிரத்தியேகமான நடைமுறைகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கடைபிடித்தது என்று கூறிய சி ஜின்பிங், மக்களின் உயிர்வாழ்வும் சுகாதார நலனுமே முதல் முன்னுரிமைக்குரியவை என்றும் வலியுறுத்தினார். மக்களின் உயிருக்கு முன்னுரிமை, தேசம் தழுவிய ஒருமைப்பாடு, தியாகம், விஞ்ஞானத்தை மதித்தல் ஆகியவற்றுடன் கூடிய மனித குலத்துக்கான பணியை பிரதிபலித்து நின்ற கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சீனாவின் உணர்வுகளை அவர் சுருக்கமாக தனதுரையில் விளக்கிக் கூறினார்.

சீன மக்களின் விட்டுக் கொடுக்காத துணிவாற்றலே அவர்கள் முன்நோக்கிய பயணத்துக்கு குறுக்கே வரக்கூடிய சகலவிதமான இடர்களையும் தடைகளையும் வெற்றிக்கொள்வதற்கான வல்லமையின் ஆதாரம் என்று கூறிய ஜனாதிபதி இடர்களையும் சவால்களையும் எதிர்த்து தேசிய ஆட்சிமுறையின் ஆற்றலை மேம்படுத்துவதற்கான அடிப்படை உத்தரவாதம் சீனப் பண்புகளுடனான சோசலிஷத்தின் தலைசிறந்த அனுகூலமேயாகும் என்றும் குறிப்பிட்டார். அன்பளிப்பான எந்தவொரு அலையையும் மனவடக்கத்துடனும் சமநிலை அமைதியுடனும் சீனதேசம் கடந்து செல்வதற்கு உறுதியான அடித்தளத்தை அமைத்த சீன மக்கள் குடியரசின் தாபிதத்துக்கு பிறகு ஒன்று திரட்டப்பட்ட உறுதியான தேசிய வல்லமையை கொரோனா வைரஸ_க்கு எதிரான பாரிய போராட்டம் மீண்டும் ஒரு தடவை நிரூபித்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

மகத்தான செயற்தூண்டுதல் உணர்ச்சியை வழங்கியதும் கருத்தொருமிப்பையும் வளங்களின் தேட்டத்தையும் கட்டியெழுப்புவதற்கு உதவியதுமான அடிப்படை சோசலிஷ விழுமியங்களினதும் உன்னதமான பாரம்பரிய சீன கலாசாரத்தினதும் பலத்தையும் கொவிட்-19க்கு எதிரான போராட்டம் வெளிக்காட்டியிருக்கிறது.

மனித குலத்துக்கான பொதுவான எதிர்காலம் ஒன்றுடன் கூடிய சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு பரந்தளவிலான அழைப்பை விடுப்பது மாத்திரமே பொதுவான சவால்களை மனிதகுலம் வெற்றிக்கொள்வதற்கும் கூடுதல் சுபீட்சமுடையதும் சிறப்பானதுமான உலகொன்றை கட்டியெழுப்புவதற்கும் சரியான மார்க்கமாகும்.

புதிய யுகத்தில் மகத்தான பயணத்தில் சீன மக்களும் சீன தேசமும் நிச்சயமாக முன்னோக்கி செல்வார்கள். எந்தவொரு தனிநபருமோ அல்லது சக்தியுமோ சிறப்பான வாழ்வொன்றை நோக்கிய சீன மக்களின் பயணத்தை தடுத்து விட முடியாது என்று சி ஜின்பிங் பிரகடனம் செய்தார்.

படவிளக்கம்: கௌரவிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களில் ஒருவரான ஷொங் நான்ஷானுடன் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22