பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 84 பலியானதையடுத்து நைஸ் விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்த அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டதுடன்,தற்போது இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

விமான நிலையம் மூடப்பட்டமைக்கான காரணங்கள் இன்னும் வெளியிடப்படவில்லையென அந்நாட்டு ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.

பிரான்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நைஸ் நகரத்தில் இடம்பெற்ற பிரான்ஸின் தேசியதின நிகழ்வொன்றின் போதே இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.