கர்ப்பிணி பெண்கள் கோப்பி அருந்தலாமா..?

Published By: Digital Desk 4

18 Sep, 2020 | 04:53 PM
image

கர்ப்பிணி பெண்களும், கருவுறுவதற்கு காத்திருக்கும் பெண்களும் அதிக அளவில் கோப்பியை அருந்த வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இதுதொடர்பாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாவது..

திருமணமாகி பெண்கள் கருவுருவாவதற்காகக் காத்திருக்கும் தருணங்களிலும், கருவுற்றிருக்கும் பெண்களும் கோப்பியை அதிகளவு அருந்தினால், கருவில் இருக்கும் சிசுவை பாதிக்கும். அத்துடன் பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பொதுவாக எம்மில் பலரும் குறிப்பாக பெண்கள் அதிகாலையில் எழுந்து இல்ல பணிகளை தொடங்கும் முன் கோப்பியை அருந்துவது வழக்கம். இந்த வழக்கம் கட்டுக்குள் இருந்தால்.. அதாவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காமல் இருந்தால் நல்லது  என்றும், கேடு விளைவிப்பதாக இருந்தால் அதனை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் கோப்பியில் உள்ள காஃபின் என்ற வேதிப்பொருள் எம்முடைய உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களை அவர்களின் கருவுறும் தன்மையை பாதிக்கிறது. அத்துடன் கருச்சிதைவை ஏற்படுத்த தூண்டுகிறது. சில கருவுற்றிருக்கும் பெண்கள் கோப்பியை தொடர்ந்து பருகிவந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை, எடை குறைவாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு உள்ளாகவும் பிறப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம். இதனால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சியும் பாதிக்கப்படலாம். அத்துடன் அந்த குழந்தை வளரும் தருணங்களில் உடற்பருமன், குழந்தைப்பருவ ரத்த புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.

இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதன் காரணமாக கருவுற்றிருக்கும் பெண்களும், கருவுறுதலுக்கு காத்திருக்கும் பெண்களும் கோப்பி அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சில பெண்களுக்கு கோப்பி அருந்துவது உளவியல் சார்ந்த வலிமையுடன் இணைந்திருந்தால் அவர்கள் கோப்பி அருந்துவதை குறைத்துக் கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

டொக்டர் ஸ்ரீதேவி.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29