கொரோனா தொற்றினால் குழந்தைகளுக்கு மூக்கு வடிதல் ஏற்படுமா?

Published By: Jayanthy

18 Sep, 2020 | 02:36 PM
image

மூக்கு வடிதனால் மட்டுமே பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று  இல்லை எனவும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சளி இரண்டையும் எண்ணி குழப்பமடைய வேண்டாம் என லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் பெற்றோரை வலியுறுத்தியுள்ளார்.

குழந்தைகளுக்கு மூக்கு வடியும் அறிகுறி இருந்தால் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை, அதற்கு பதிலாக சளி  தொல்லை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் குழந்தைகளுக்கு சோர்வு மிகவும் பொதுவான அறிகுறி எனவும் என்று குறித்த நிபுணர் தெரிவித்துள்ளார்.

Children suffering from a runny nose 'absolutely' do not have coronavirus - but may instead be suffering from the common cold, a top expert has warned (stock)

லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர், கொரோனா வைரஸ் அறிகுறி குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் படி பாடசாலை பருவ குழந்தைகளுக்கு கொவிட் -19 இன் பொதுவான அறிகுறிகளாக சோர்வு (55 சதவீதம்), தலைவலி (55 சதவீதம்) மற்றும் காய்ச்சல் (49 சதவீதம்) வெளிப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், மிகவும் பொதுவான அறிகுறிகளாக சோர்வு (87 சதவீதம்), தலைவலி (72 சதவீதம்) மற்றும் வாசனை இழப்பு (60 சதவீதம்) காணப்படுவதாக அவரின் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. 

இவ் ஆய்வில், கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மூக்கு வடிதல்  பற்றி பெரும்பாலானோர் தெரிவிக்கவில்லை, இதன் அடிப்படையில் மூக்கு வடியும் அறிகுறி மட்டும் உள்ள சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பெற்றோர் அச்சம் கொள்ள தேவையில்லை என பேராசிரியர் டிம் ஸ்பெக்டர்,  கேட்டுக்கொண்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29