பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை இன்று (15) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.