பாம்பு தீண்டியதில் 7 வயது சிறுவன் பரிதாப பலி

Published By: Digital Desk 4

17 Sep, 2020 | 08:49 PM
image

வட்டுக்கோட்டை தெற்கைச் சேர்ந்து செல்வம் ஜெசிந்தன் (வயது -7) என்ற 2ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

“சிறுவன் நேற்று மாலை 6.30 மணியளவில் மலசல கூடத்துக்குச் சென்றுள்ளான். அங்கு பாம்பு தீண்டியுள்ளது. அதனை தாயாரிடம் வந்து சிறுவன் கூறியுள்ளான். எனினும் பாம்பு இல்லை பூச்சி எதுவோ கடித்துள்ளது என்று தாயார் பெரிதுபடுத்தாமல் விட்டுள்ளார்.

இந்த நிலையில் ஒன்றரை மணி நேரத்தின் பின் சிறுவன் மூச்சு விடுவதில் அவதிப்பட்டுள்ளான். அதன் பின்னரே சிறுவனை தாயார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

எனினும் உடலில் விஷம் ஏறியதால் சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தான்” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணையை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் முன்னெடுத்தார். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33