20 ஐ ஒன்றரை மாத காலத்துக்குள் நிறைவேற்றுவோம் - ரோஹித அபேகுணவர்தன

Published By: Digital Desk 3

17 Sep, 2020 | 02:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை  எதிர் தரப்பினரின் ஆதரவின்றி ஒன்றரை மாத காலத்துக்குள் நிறைவேற்றுவோம். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்களுக்கு எவ்வித பாதிப்பும்  ஏற்படவில்லை.  ஜனாதிபதியுடன் அரசாங்கம்   இணக்கமாகவே செயற்படும்  என கப்பற்துறை  மற்றும் துறைமுக அபிவிருத்தி  அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின்  காரியாலயத்தில் இன்று    வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு  கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுக்க முடியாது என்ற காரணத்திற்காகவே அரசியலமைப்பின் 19  ஆவது திருத்தம் இரத்து  செய்யப்பட்டு  20 ஆவது திருத்தம்   உருவாக்கத்திற்கான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டன. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட  20 ஆவது திருத்தத்தில் குறைப்பாடுகள்  உள்ளது என   மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.  

மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து  20 ஆவது திருத்த  சட்டவரைபு மீள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.  அரசியலமைப்பு  திருத்தம், நாட்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பு ஆகியவற்றை   உருவாக்குவதாக நாட்டு  மக்களுக்கு  வாக்குறுதி வழங்கினோம்.  வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு    அரசாங்கத்துக்கு உள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை  நாட்டு மக்கள் புறக்கணித்தமையால் தான் கடந்த அரசாங்கத்தை முழுமையாக புறக்கணித்தார்கள். அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டும்   என்ற காரணத்தினால் அரசாங்கம் அரசியலமைப்பினை திருத்தம் செய்ய  நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

 எதிர்தரப்பினரது ஆதரவு இல்லாமல்     அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை   மூன்றில் இரண்டு   பெரும்பான்மை ஆதரவுடன் எம்மால் ஒன்றரை மாத காலத்துக்குள் நிறைவேற்ற முடியும்.      நடைமுறைக்கு பொருத்தமான விடயங்கள்  அரசியலமைப்பின்  20 ஆவது   திருத்ததில் உள்ளடக்கப்பட்டுள்ளது.   ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் அதிகாரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.  ஜனாதிபதியுடன் இணக்கமாக  செயற்பட்டு அரச நிர்வாகத்தை முன்னெடுப்போம்   என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19