2.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றல்

Published By: Raam

15 Jul, 2016 | 11:49 AM
image

இந்தியாவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்ட விமானத்தில் போதை பொருள்  கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்துக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் சிவகங்கை மாவட்டம் இளையான் குடியை சேர்ந்த சிக்கந்தர் அலி (40) என்ற இளைஞரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது பயணப்பையில்  4 கிலோ போதைப் பொருளை மறைத்து வைத்து கடத்த முயன்றவேளையில் சிக்கந்தர் அலி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சென்னை ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த  சாதிக் பாட்ஷா என்பரின் மூலம் குறித்த போதைப்பொருள் கொள்வனவு செய்யப்பட்டமை தெரிய வந்ததுள்ளது.

இந்நிலையில்,சாதிக் பாட்ஷா வீட்டில் மேற்க்கொண்ட சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு இலங்கை ரூபாயில் 2 .5 கோடியாகும்.

பொலிஸார் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47