கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டார்

Published By: Vishnu

16 Sep, 2020 | 10:25 AM
image

தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அழைத்துவரப்பட்டு உள்ளார்.

இந்திய - இலங்கை அரசுகளிடம் நீதிகோரி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 33 ஆவது நினைவு தினம் நேற்று பல தடைகளையும் தாண்டி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் நினைவுகூரப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் நினைவுதினத்தில் நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவுகள் போலீசார் நீதிமன்றத்தின் ஊடாக எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம்,யாழ் பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திலீபனின் நினைவு தினம் தடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அனுஸ்டித்தார். இதனால் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10