தமிழ் அர­சியல் கைதிகள் 31 பேருக்கு நிபந்­த­னை­யு­ட­னான 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஆட்­பி­ணையில் செல்­வ­தற்கு கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலப் பிட்­டிய நேற்­றைய தினம்­ அ­னு­ம­தி­ய­ளித்­துள்ளார்.

எனினும் ஆட்­பி­ணைக்­கான கையொப்­ப­மி­டு­வதற்கு நேற்­றைய தினம் எவரும் சமு­க­ம­ளித்­தி­ருக்­கா­ததன் கார­ண­மாக இன்­றைய தினம் அந்­ந­டை­மு­றைகள் நிறை­வேற்­ றப்­பட்­டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட வர்கள் வீடு திரும்­பு­வார்­க­ளென அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.


முன்­ன­தாக பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தேகத்தின் பேரில் பயங்­க­ர­வா­த தடைச்­சட்­டத்தின் கீழ் கைதுசெய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 24 ஆண்கள்இ 2 பெண்கள் உள்­ளிட்ட 26 தமிழ் அர­சியல் கைதிகள் மீதான வழக்கு விசா­ரணை கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தின் ஐந்தாம் இலக்க மன்றில் நீதி­பதி அருணி ஆட்­டி­கல முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு நேற்­றைய தினம் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.


இதன்­போது பிர­தி­வா­திகள் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான பி.கிரி­ஷாந்தன், வி.நிரஞ்சன் ஆகியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். ­அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்­கு­வ­தற்கு சட்­டமா அதிபர் திணைக்­களம் எதிர்ப்புத் தெரி­விக்க கூடா­தென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­த­ர­விட்­டுள்­ள­தாக ஊட­கங்­களில் செய்­திகள் வெ ளியா­கி­யுள்­ளன. சட்­டமா அதிபர் திணைக்­க­ளமும் பிணை­வ­ழங்கும் செயற்­பா­டுளை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது. ஆகவே எமது தரப்­பி­ன­ருக்கு பிணை வழங்­க­வேண்­டு­மென சட்­டத்­த­ர­ணிகள், கோரினர்.


இதன்­போது நீதி­பதி அருணி ஆட்­டிக்­கல பிர­தி­வா­தி­க­ளுக்கு விடு­த­லை­ய­ளிப்­பது தொடர்­பாக பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரிவின் அதி­கா­ரியின் கருத்தை வின­வினார். அதன்­போது பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரிவின் அதி­காரிஇ சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தால் தமக்கு எவ்­வி­த­மான உத்­த­ர­வு­களும் பிறப்­பிக்­கப்­ப­ட­வில்லை. எனவே பிர­தி­வா­தி­க­ளுக்கு பிணை­ய­ளிப்­ப­தற்கு அனு­ம­தி­ய­ளிக்க முடி­யா­தென குறிப்­பிட்­டனர்.


இத­னை­ய­டுத்து நீதி­பதி அருணி ஆட்­டிக்­கல எதிர்­வரும் 24ஆம் திக­திக்கு வழக்கை ஒத்­தி­வைப்­ப­தாக உத்­த­ரவு பிறப்­பித்தார். இந்நிலையில் தமிழ் அர­சியல் கைதிகள் மீண்டும் மகசின் சிறைச்­சா­லைக்கு கொண்டு செல்­ல­வ­தற்­காக சிறைச்­சாலை வாக­னத்தில் ஏற்­றப்­பட்­டனர்.


இதன்­போது வாக்­கு­று­தி­களை வழங்கி எம்மை ஏமாற்றி விட்­டார்கள், நாம் ஏமாற்­றப்­பட்டு விட்டோம். எமக்கு விடு­த­லை­ய­ளி­யுங்கள் எம்மை தொடர்ந்தும் ஏமாற்­றா­தீர்கள், நல்­லாட்­சியில் எமக்கு இதுவா நிலை­மை­யென கோஷ­மெ­ழுப்­பி­ய­வாறு சிறைச்­சாலை வாக­னத்­திற்குள் சென்­றனர். வாக­னத்­திற்குள் சென்றும் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி பலத்த சத்­தத்தில் கோஷ­மெ­ழுப்­பினர்.


அதே­நேரம்இ தமது உற­வு­க­ளுக்கு இன்று(நேற்று) விடு­த­லை­ய­ளிக்­கப்­ப­டு­மென்ற பாரிய எதிர்­பார்ப்­புடன் நீதி­மன்ற வாயிலில் கூடி­யி­ருந்த உற­வு­களும் தமது உற­வு­களை விடு­தலை செய்­யு­மாறு கோஷங்­களை எழுப்­பினர். அவ்­வி­டத்­திற்கு வருகை தந்­தி­ருந்த மனித உரிமை செயற்­பாட்­டாளர் அருட்­தந்தை சக்­திவேல், அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான குழுவின் தலைவர் சுந்­தரம் மகேந்­திரன் உள்­ளிட்­டோரும் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு விடு­த­லை­ய­ளிக்க வேண்­டு­மென வலி­யு­றுத்­தினர்.


இதனால் அவ்­வி­டத்தில் பொலி­ஸா­ருக்கும் கோஷ­மெ­ழுப்­பி­ய­வர்­க­ளுக்­கு­மி­டையில் முறுகல் நிலைமை ஏற்­பட்­டதால் பதற்­ற­நி­லை­யொன்று உரு­வா­னது. எனினும் பொலிஸார் நீதி­மன்ற முன்­றலில் குழு­மி­யி­ருந்­த­வர்­களை அகற்­றி­ய­துடன் தமிழ் அர­சியல் கைதி­களை சிறைச்­சாலை வாக­னத்தில் ஏற்­றி­ய­னுப்பி வைத்­தனர்.


அதனைத் தொடர்ந்து நண்­ப­க­லுக்கு பின்னர் மீண்டும் நீதிவான் நீதி­மன்ற அமர்­வுகள் ஆரம்­பித்­த­வேளை சட்­டமா அதிபர் திணைக்­களம் 31தமிழ் அர­சியல் கைதி­களை பிணையில் விடு­தலை செய்­வ­தற்­கான அனு­ம­தியை அளித்து நகர்த்தல் பிரே­ர­ணை­யொன்றை சமர்ப்­பித்­தது. இதன்­போது மூன்று பெண்கள் உட்­பட 31 தமிழ் அர­சியல் கைதிகள் நீதிவான் நீதி­மன்­றத்தின் பிர­தான மன்றில் பிர­தம நீதி­பதி கிஹான் பிலப்­பிட்­டிய முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர்.


இதன்­போது சிரேஷ்ட அரச சட்­டத்­த­ரணி நவாவி, பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரிவின் பணிப்­பாளர், நீதி­மன்ற அலு­வகர் உள்­ளிட்ட அதி­கா­ரிகள் மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர். பிர­தி­வா­திகள் தரப்பில் பி.கிரி­ஷாந்தன்இ மங்­களா சங்கர் உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் குழ­வினர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.


சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தால் சமர்ப்­பிக்­கப்­பட்ட நகர்த்தல் பிரே­ரணை மீதான விசா­ர­ணையின் போது சட்­டமா அதி­பரின் அனு­ம­தியைக் கருத்திற் கொண்ட நீதிவான் நீதி­மன்­றத்தின் பிர­தம நீதி­பதி கிஹான் பிலப்பிட்­டிய கைதிகளை பிணையில் செல்ல அனுமதித்தார். அத்துடன் குறித்த 31பேரும் பிணையில் செல்­வ­தானால் 10 இலட்சம்ரூபா பெறுமதியில் தலா இருவர் ஆட்­பி­ணைக்­கான கையொப்­ப­மி­ட­வேண்­டி­யது அவ­சியம்இ எவ­ரி­டத்­தி­லா­வது கட­வுச்­சீட்டு காணப்­ப­டு­மானால் அது நீதி­மன்றில் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வேண்டும். கொழும்பு அல்­லது வவு­னி­யாவில் அமைந்­துள்ள பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரிவு அலு­வ­ல­கத்தில் 14நாட்­க­ளுக்கு ஒருதடவை 9மணி முதல் 12 மணி வரையிலான காலவேளையில் கையொப்பம் இடவேண்டியது அவசியம் ஆகிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் 27ஆம் திகதி ஜனவரி மாதம் இவ்வழக்கு மீதான விசாரணை மீண்டும் எடுத்துக்கொள்ளப்படுமென அறிவித்தார்.


எனினும் பிணையில் செல்வதற்கான அனுமதி குறித்த 31பேருக்கும் வழங்கப்பட்டபோதும் அவர்களுக்கான ஆட்பிணைக் கையொப்பமிடுவதற்கான நபர்கள் இன்மையால் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இன்றைய தினம் அவர்களின் பிணை தொடர்பான நடைமுறைகள் நிறைவேற்றப்பட்டு வீடு செல்வர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.